ETV Bharat / sports

'வாத்தி கம்மிங் ஒத்து' சென்னை வந்த தோனி.. வைரலாகும் வீடியோ! - MS Dhoni in Chennai

MS Dhoni in Chennai: ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்தார்.

chennai
chennai
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 9:21 PM IST

'வாத்தி கம்மிங் ஒத்து' சென்னை வந்த தோனி.. வைரலாகும் வீடியோ!

சென்னை: ஐபிஎல் 2024, 17வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸுக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சென்னை வந்து அடைந்துள்ளார்.

பொதுவாக, ஐபிஎல் தொடர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போட்டி ஆரம்பிக்கும் இடத்திற்கு வருகை தந்து, பயிற்சியை மேற்கொள்வதுதான் தோனியின் வழக்கம். ஆனால், இம்முறை 16 நாட்களுக்கு முன்பாக தோனி சென்னை வந்துள்ளார்.

முன்னதாக, குஜராத் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் பீரி வெட்டிங் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. அதில் எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்‌ஷியுடன் கலந்து கொண்டார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

இந்த சூழலில், அங்கு இருந்து நேரடியாக சென்னை வந்து உள்ளார், தோனி. மேலும், ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தோனி தனது விண்டேஜ் ஹேர்ஸ்டைலுடன் சென்னைக்கு வந்துள்ளார். இது சம்பந்தப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை அணியின் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் உள்பட சில வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தோனி இன்று சென்னைக்கு வருகை தந்த நிலையில், நாளை முதல் தினமும் மாலை பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சன்ரைசஸ் ஐதராபாத் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமனம்! எய்டன் மார்க்ராம் நீக்கம்! பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.