ஐதராபாத்: இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. மைதானத்தில் மட்டுமின்றி பொது வாழ்விலும் அவர் குறித்து அரசல் புரசலாக பல்வேறு கருத்துகள் வைரலாகி வருகின்றன. அண்மையில் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிக்கிடம் இருந்து ஹர்திக் பாண்டியா விவாகரத்து பெற்றார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் நீண்ட ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, கிரீஸ் நாட்டில் தனது விடுமுறை கழித்தார். மேலும் ஹர்திக் பாண்டியா பிரிட்டன் பாடகி ஜாஸ்மீன் வாலியாவுடன் தனது விடுமுறையை கழித்து வருவதாக தகவல்கள் பரவியது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும், ஒரே இடத்தில் இருவரும் மாற்றி மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை குறிப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
முன்னதாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவுடன், ஹர்திக் பாண்டியா நெருங்கி பழகி வருவதாகவும் இருவரும் டேடிட்ங்கில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், பாலிவுட் நடிகை ஒருவர் பேட்டி ஒன்றில் ஹர்திக் பாண்டியாவை தான் விரும்புவதாக தெரிவித்து இருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
Ishita Raj said about Hardik Pandya:- I follow him , I feel I love him , if india is somewhere in the middle then we have hardik there ,really like we have still hopes hardik is there , hardik gone a ball them out , hardik gone a beat them out . pic.twitter.com/Kx4zpPkZBl
— छवि🫶🏻 (@hardikxchhavi_) August 29, 2024
பாலிவுட் நடிகை இஷிதா ராஜ், அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் ஹர்திக் பாண்டியாவை விரும்புவதாக தெரிவித்துள்ளார். பேட்டியில் பேசிய அவர், "எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். குறிப்பாக ஹர்திக் பாண்டியா என்றால் அளவு கடந்து பிடிக்கும். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர்.
அவரது பேட்டிங்கை பார்க்கும் போது மனதை உரையச் செய்யும். ஹர்திக் எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர். இந்திய அணி சிக்கலில் இருக்கும் போது, ஹர்திக் பாண்டியா கிரீஸில் இருக்கிறார் என்றால் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி, நீண்ட நாட்களாக நான் அவரைப் பின்தொடர்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன் என்று உணர்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விவாகரத்து பின்னருக்கு இரண்டு பேருடன் ஹர்திக் பாண்டியா இணைத்து பேசப்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக பாலிவுட் நடிகையும் இணைந்து இருப்பது ரசிகர்களை குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. 34 வயதான இஷிதா ராஜ் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான பியார் கா பஞ்ச் நாமா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இஷிதாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் கூடியது. அதைத் தொடர்ந்து கே டிடு கி ஸ்வீட்டி உள்ளிட்ட 9 படங்களில் இஷிதா ராஜ் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் ரோகன் போபன்னா அபாரம்! - US Open 2024