சென்னை: சென்னை உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருந்த பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணியும், புனேரி பல்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
2️⃣ tie’s IN! 😮💨
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 26, 2024
📲 Watch IndianOil #UTT2024 live on JioCinema and Sports18 Khel in India and on Facebook Live outside India
Tickets available on https://t.co/or5ruqsUAS
🔗https://t.co/OG2cOMu4qB #UTT #UltimateTableTennis #TableTennis #HarShotMeinMazaa #IndianOilUTT pic.twitter.com/tdLvQJ4ZLI
மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 10-5 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. முதலில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பெங்களூரு அணியின் ஜான் சந்திராவும், புனேரி அணியின் அன்கூர் பட்டாச்சார்ஜியும் மோதினர். இதில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று புனேரி அணியின் புள்ளி கணக்கைத் தொடங்கினார் அன்கூர்.
இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் சரிவை சந்தித்தது புனே. மகளிர் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ராவும் - ஹய்கா முகர்ஜியும் மோதினர். இதில் பெங்களூரு அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் பெங்களூரு அணியின் ரோபல்ஸ் - மணிகாவும் இணை, புனே அணியின் அனிர்பன்- பஜோர் இணையை எதிர்கொண்டது. இதன் முடிவில் 2-1 கணக்கில் ரோபல்ஸ் - மணிகா இணை பெற்றது.
இதன் பின்னர் புனே அணியால் மீண்டும் வர முடியவில்லை. அடுத்தடுத்த அபாரமான ஆட்டத்தால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறிச் சென்றது. இறுதியில் நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் போட்டியில் லில்லி ஷாங்க் - யாஷினி சிவசங்கர் ஆகியோர் மோதினர்.
இதன் முடிவில் பெங்களூரு அணியின் லில்லி ஷாங்க் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். இறுதியில் புனேரி பல்தான் அணியை 10-5 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ். இந்த வெற்றி மூலம் 21 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது பெங்களூரு அணி.
Ankur Bhattacharjee’s 🚀 strike is your @Dafanewsindia shot of the tie ⏩ Bengaluru Smashers 🆚 Puneri Paltan TT 🤯
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 26, 2024
📲 Watch IndianOil #UTT2024 live on JioCinema and Sports18 Khel in India and on Facebook Live outside India
Tickets available on https://t.co/or5ruqsUAS… pic.twitter.com/JWB1y2yNS6
இன்றைய போட்டி: இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணி, 3வது இடத்தில் உள்ள யு மும்பா டிடி அணியை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்ட சீனியர் வீரர்கள்! வாய்ப்பு கிடைக்குமா? ஓய்வு தான் வழியா?