ETV Bharat / sports

100வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார் பென் ஸ்டோக்ஸ்!

IND Vs ENG 3rd Test Match: இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாடுகிறார். இந்த போட்டி பென் ஸ்டோக்கிற்கு 100வது டெஸ்ட் போட்டியாகும்.

IND VS ENG 3rd Test Match
பென் ஸ்டோக்ஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 10:32 AM IST

சென்னை: இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என்ற கணக்கில் உள்ளது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (பிப்.15) ராஜ்கோட்டில் உள்ள சவுராஸ்டிரா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளார்.

தற்போது நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மூலம், தனது 100வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடுகிறார். மேலும், இவர் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16வது இங்கிலாந்து வீரர் ஆவார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில், 179 இன்னிங்ஸ்ஸில் விளையாடி 6,251 ரன்களை குவித்து உள்ளார்.

அதிகபட்ச ஸ்கோர் 258 ஆகும். 36.34 சராசரியிலும், 59.31 ஸ்ட்ரைக் ரேட்டிலும் உள்ளார். மேலும், 99 போட்டிகளில் 13 சதங்களையும், ஒரு இரட்டை சதத்தையும், 31 அரை சதங்களையும் விளாசி அசத்தி உள்ளார். அது மட்டுமன்றி, 197 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.

கடைசியாக கடந்த பிப்.2ஆம் தேதி நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரில் பங்கேற்று 57 ரன்கள் பெற்றிருந்தார். முன்னதாக, ஒரு பேட்டியில் ஸ்டோக்ஸ், “100வது டெஸ்ட் ஒரு நம்பர்தான். அடுத்த போட்டி 101 ஆக இருக்கப் போகிறது. இதை நான் பெரிதாக எடுக்கவில்லை. அதனால் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானது” என்றார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் 3வது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களைக் களமிறக்கி உள்ளது. இரு வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய அணி வீரர்கள் எவ்வாறு எதிர்க்கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணிதான் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது. பின்னர், யாரும் இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தவில்லை. அதனால், இந்த போட்டி மிக முக்கியமான போட்டியாக ரசிகர்களால் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்; இந்திய அணி பேட்டிங் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.