ETV Bharat / sports

ஆர்டிஎம் என்றால் என்ன? அணிகள் எப்படி ஆர்டிஎம் விதியை பயன்படுத்த முடியும்? பண மழையில் நனையப் போவது யார்? - IPL RETENTION AND RTM RULES

தீபாவளியன்று 10 அணிகளும் தங்களது தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட்டாக வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், மெகா ஏலம் எப்படி இருக்கும், விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Representational Image (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 30, 2024, 1:34 PM IST

ஐதராபாத்: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களது தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்.31) தீபாவளித் தன்று மொத்தம் உள்ள 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ கெடு விதித்துள்ளது.

இந்த முறை ஐபிஎல் தக்கவைப்பு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மெகா ஏலத்தில் ஆர்டிஎம் விதி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆர்டிஎம் விதிமுறை மூலம் ஒரு அணி அதிகபட்சம் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என விதிகள் கூறுகிறது என்பது குறித்து காணலாம்.

எத்தனை வீரர்களை தக்கை வைக்க முடியும்:

முதலாவது விதியின் படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்க முடியும். தக்கவைப்பு அல்லது மெகா ஏலத்தின் போது அர்டிஎம் விதியை பயன்படுத்தி அணி வீரர்களை தக்கவைக்கலாம். தக்கவைப்பு வீரர்களில் அதிகபட்சம் 5 பேர் கேப்டு வீரர்களாகவும், 2 பேரை அன்கேப்டு பிளேயர்களாகவும் அணிகள் தக்கவைக்க அனுமதிக்கப்படுகிறது.

ஆர்டிஎம் என்றால் என்ன?

முதன் முதலாக 2017ஆம் ஆண்டு ஆர்டிஎம் விதிமுறை கொண்டு வரப்பட்டது. ஆனால் 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது இந்த விதி திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் இந்த விதி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விதியின் மூலம் முன்னர் விளையாடிய ஒரு வீரரை மெகா ஏலத்தின் போது மீண்டும் அணி தக்கவைக்க வழிவகை செய்கிறது.

ஆர்டிஎம் விதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

ஒரு அணியில் இருந்து கழற்றி விடப்படும் வீரர், மீண்டும் ஏலத்தில் கலந்து கொள்ளும் போது அவரை மற்ற அணிகள் விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். அதேநேரம் அந்த வீரரை மீண்டும் அந்த அணியே தக்கவைக்க விரும்பும் பட்சத்தில் அந்த நேரத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

முந்தைய சீசனில் ஒரு அணியின் வீரர் ஏலத்தில் விற்கப்பட்டால், அந்த அணியிடம் ஆர்டிஎம் கார்டு இருக்கும் பட்சத்தில் அவரை மீண்டும் தக்கவைக்க முடியும். மெகா ஏலத்தில், பழைய அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தினால், ஏலத்தில் அந்த வீரருக்கு கடைசியாக வைக்கப்பட்ட ஏலத்திற்கு சமமான தொகையை செலுத்த வேண்டும்.

ஆர்டிஎம் விதியால் வீரருக்கு என்ன பலன்?

மறுபுறம், பழைய அணி ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தவில்லை என்றால், கடைசியாக ஏலம் எடுத்த அணி அந்த வீரரை வாங்கிக் கொள்ளலாம். இருப்பினும், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இது நடக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை பழைய உரிமையானது ஒரு பிளேயருக்கு ஆர்டிஎம் கார்டைப் பயன்படுத்த விரும்பினால், கடைசி ஏல உரிமையாளருக்கு அதன் ஏலத்தை அதிகரிக்க ஒரு கடைசி கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அப்படி இருக்கையில், பழைய அணி அந்த வீரரை மீண்டும் அணியில் சேர்க்க ஆர்டிஎம் கார்டைப் பயன்படுத்தி அந்த கூடுதல் ஏலத் தொகையை செலுத்த வேண்டும். இந்த விதிக்கு அணிகளிடையே கடும் விவாதம் நடைபெற்றது. அதேநேரம் ஏலத்தின் உற்சாகத்தை இந்த விதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "நான் செவனேனு தானயா இருந்தேன்.." ரசிகருக்கு ரொனால்டோ கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.