ETV Bharat / sports

"இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போனஸ்" - வெளியான அதிரடி தகவல்! - கிரிக்கெட்

Test Match Fee Hike: இனி வரும் டெஸ்ட் போட்டிகளுக்குச் சம்பளத் தொகையை உயர்த்துவதுடன், ஆண்டின் இறுதியில் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்ட வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் பிசிசிஐ வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி
author img

By ANI

Published : Feb 27, 2024, 9:34 PM IST

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டெஸ்ட் போட்டிகளுக்கான சம்பளத்தை உயர்த்துவதாகவும், ஆண்டு இறுதியில் ஊக்கத்தொகையும் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாடி வருகின்றது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிவுற்ற நிலையில், இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 5வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த முடிவை எட்டியுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பிசிசிஐ ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூபாய் 15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், சர்வதேச டி20 போட்டிக்கு 3 லட்சமும் சம்பளமாகக் கொடுத்து வருகிறது.

இனி வரும் டெஸ்ட் போட்டிகளுக்குச் சம்பளத் தொகையை உயர்த்துவதுடன், ஆண்டின் இறுதியில் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்ட வீரர்களுக்கு ஊக்கத்தொகையும் பிசிசிஐ வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசல்! நமீபிய வீரர் சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.