ஐதராபாத்: இந்திய அணி 2025ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அட்டவணையில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீடிசில் உள்ள ஹெடிங்லிவில் 2025ஆம் ஆண்டு ஜூன் 20அம் தேதி நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 2ஆம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று, 4 மற்றும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் முறையே ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுகின்றன. இதில் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 10ஆம் தேதியும், நான்காவது போட்டி ஜூலை 23ஆம் தேதியும், ஐந்து மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 31ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
Announced! 🥁
— BCCI (@BCCI) August 22, 2024
A look at #TeamIndia's fixtures for the 5⃣-match Test series against England in 2025 🙌#ENGvIND pic.twitter.com/wS9ZCVbKAt
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அட்டவணையை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மான்செஸ்டரில் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் பந்துவீசிய இங்கிலாந்து அணி, இலங்கையை 236 ரன்களில் முதல் இன்னிங்சில் கட்டுப்படுத்தியது. இந்த போட்டி சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் அட்டவணை விவரம் வருமாறு:
முதலாவது டெஸ்ட் | 20-24 ஜூன், 2025 | ஹெடிங்லி, லீட்ஸ் |
2வது டெஸ்ட் | 2-6 ஜூலை, 2025 | எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம் |
3வது டெஸ்ட் | 10-14 ஜூலை, 2025 | லார்ட்ஸ், லண்டன் |
4வது டெஸ்ட் | 23-27 ஜூலை, 2025 | ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் |
5வது டெஸ்ட் | 31 ஜூலை- 4 ஆகஸ்ட், 2025 | கியா ஓவல், லண்டன் |
இதையும் படிங்க: அஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இந்திய வீராங்கனைகள்! எப்படி நடந்தது? - Indian origin in Australia Squad