ஹைதராபாத்: இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று நடைபெறும் 66வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டி மற்றும் அடுத்தாக பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஹைதராபாத் அணி உள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை, இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை குஜராத் டைட்டன்ஸ் இழந்துள்ளதால், ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இப்போட்டியை குஜராத் அணி விளையாட உள்ளது.
நேருக்கு நேர்: ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் ஹைதராபாத் அணி ஒரு வெற்றியும், குஜராத் அணி மூன்று வெற்றியும் பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிட்ச் ரிப்போர்ட்: ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடக்கத்தில் ஸ்விங் பவுலர்களுக்கு உதவியாக இருக்கலாம். பின்னர், பேட்டிங்கிற்கு உதவலாம் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க :தோனியின் இறுதிப்போட்டி சென்னையில் நடக்க மற்ற அணிகள் என்ன செய்ய வேண்டும்? - Ipl Playoff Chances