பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் வரை நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நாடுகளில் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், நேற்று துடுப்புப்படகு போட்டியின் ரோவிங் சுற்று நடைபெற்றது.
அந்த போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் உடன் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சுற்றில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் நான்காவது இடத்தைப் பிடித்தார். இவர் 7:07:11 வினாடிகளில் பந்த தூரத்தை கடந்தார். இருப்பினும் அவர் அப்போட்டியில் நான்காவதாக சென்றடைந்தார்.
இந்த போட்டியில் எகிப்து நாட்டைச் சார்ந்த வீரர் எல்பனா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 7:05:6 வினாடிகளில் கடந்துள்ளார். அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்த கிரீஸ் நாட்டைச் சார்ந்த டோஸ்க்கோ 7:01:79 வினாடிகளில் கடந்துள்ளார்.
மேலும் மூன்றாவது இடத்தை நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த வீரர் மகிண்டோஸ் பிடித்துள்ளார். இவர் 6:55:92 வினாடிகளில் கடந்துள்ளார். இவர் நான்காம் இடம் பிடித்ததால் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார். இருப்பினும், ரெபகேஜ் சுற்றில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ரெபகேஜ் சுற்று என்பது தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை பெறும் சுற்றாகும்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற துடுப்புப் படகு போட்டியில் ரெபகேஜ் சுற்றில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:12:41 நிமிடங்களில் இலக்கை கடந்து இரண்டாவது இடம் பிடித்தார். இதன் மூலம் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பல்ராஜ் பன்வர் முதலாவதாக சென்ற போதிலும் மொனாக்கோ வீரர் குவெண்டின் ஆட்டத்தின் இறுதி தருவாயில் அவரை முந்தினார். இதன் காரணமாக பல்ராஜ் பன்வர் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் மொனாக்கோ வீரர் குவெண்டின் மற்றும் இந்திய வீரர் பல்ராஜ் பன்வர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக நடைபெற்ற மகளிர் 10மீ ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டியில் மனு பாக்கர் 221.7 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக் 2024: இந்தியாவிற்கு முதல் பதக்கம்! துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்று அசத்திய மனு பாக்கர்!