ETV Bharat / sports

டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு! அரைஇறுதிக்கு தகுதி பெறுமா இந்தியா? - Ind vs Aus T20 World Cup 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 7:36 PM IST

இந்திய அணிக்கு எதிரான அட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Etv Bharat
Rohit Sharma - Virat Kholi (IANS)

செயின்ட் லுசியா: 9வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

தற்போது சூப்பர் 8 சுற்றும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இதுவரை தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து உள்ளன. அரை இறுதிக்கு தகுதி பெறும் மற்ற இரண்டு அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், இன்று (ஜூன்.24) செயின்ட் லுசியாவில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். அதேநேரம் தோல்வி அடையும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை தக்கவைக்கும்.

இதில், நாளை (ஜூன்.25) நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவும் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பை பிரதிபலிக்கும். ஒருவேளை ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோற்று, நாளை நடைபெறும் இறுதி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் அரை இறுதி கனவு கலையக் கூடும்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறையும் வலுவாக காணப்படுகிறது. அதேநேரம் கடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தாலும், ஆஸ்திரேலியாவை குறைத்து மதிப்பிடக் கூடாது.

அவர்களும் அரைஇறுதி வாய்ப்புக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதனால் இந்திய வீரர்கள் கடும் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி வாகை சூட வேண்டும். வெற்றிக்காக இரண்டு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

செயின்ட் லுசியால் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தர்ப்பில் கூறப்படுவதால் இன்றைய ஆட்டத்தில் மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையும் படிங்க: ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடர்: சுப்மான் கில் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி! - Zimbabwe T20 Series India Squad

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.