சண்டிகர்: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டாவது பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ள பிட்ச் என்பதால் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரனும் டாஸை வென்றிருந்தால் நாங்களும் பந்து வீச்சை தான் தேர்வு செய்திருப்போம் என்று கூறினார். இன்றைய போட்டியில் மிகப் பெரிய மாற்றம் இரண்டு அணிகளிலும் நிகழ்ந்து உள்ளது.
பஞ்சாப் அணியில் காயம் காரணமாக ஷிகர் தவான் வெளியேறி உள்ளார். அதற்கு பதிலாக அதர்வ தைடே அணியில் சேகப்பட்டிருந்தார். மற்றொரு மாற்றமாக கடந்த போட்டில் விளையாடத லியாம் லிவிங்ஸ்டோன் இந்த போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் அணியிலும் காயம் காரணமாக ஜோஸ் பட்லர் மற்றும் அஷ்வின் ஆகியோர் வெளியேறி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக ரோவ்மேன் பவல், தனுஷ் கோட்யான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முதலில் பேட்டிங் செய்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. .
தொடக்க வீரர்களான அதர்வ தைடே மற்றும் பேரிஸ்டோவ் ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. தைடே, குல்திப் சேன் பந்து வீச்சில் ஆவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து 15 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேரிஸ்டோவ் இந்த சீசன் தொடக்கத்தில் இருந்தே பெரிதாக பெர்ஃபார்ம் செய்யாத பட்சத்தில் இந்த போட்டியிலும் 15 ரன்களில் வெளியேறினார்.
இதற்கிடையில் பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களில் வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து சாம் கரன் 6, ஷஷாங்க் சிங் 9 என ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் வந்த லிவிங்ஸ்டோன் 1 சிக்சர், 2 ஃபோர்கள் அடித்து 21 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அசுதோஷ் சர்மா இந்த போட்டியிலும் 16 பந்துகளில் 31 ரன்கள் அடித்து தனது அணிக்கு ரன்களை சேர்த்து கொடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் அணி சார்பில் அவேஷ் கான் மற்றும் கேசவ் மகாராஜ் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளனர். மற்ற பந்து வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட், குல்திப் சேன், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க: கங்கனா ரனாவத்தை எதிர்த்து போட்டியிடும் விக்ரமாதித்ய சிங்! யார் இவர்? - Lok Sabha Election 2024