ஐதராபாத்: கிரிக்கெட், உலகில் அதிகம் பேர் விரும்பும் விளையாட்டுக்களில் ஒன்று. தங்களது அபரிவிதமான பேட்டிங் அல்லது பந்துவீச்சு ஸ்டைல், சாதனைகள் மூலம் ரசிகர்களை கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள் உண்டு. அதேநேரம் ஆண்களுக்கு நிகராக தற்போது மகளிர் கிரிக்கெட்டும் அசூர வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது.
வீரர்களுக்கு இணையாக சில வீராங்கனைகளும் தங்களது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறன் மூலம் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். உலகின் டாப் கவர்ச்சிகர கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
எலிசி பெர்ரி (Ellyse Perry):
டென்னிஸ்க்கு ஒரு மரிய ஷராபோவா என்றால் கிரிக்கெட்டுக்கு எலிசி பெர்ரி. அழகு மட்டுமின்றி தனது தனிப்பட்ட திறமையின் காரணமாகவும் அனைவரும் விரும்பும் வீராங்கனை ஆனார். 16 வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடத் தொடங்கிய எலிசி பெர்ரி, கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலக கோப்பை தொடர்களில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய பெண் என்ற சாதனையையும் எலிசி பெர்ரி படைத்துள்ளார்.
ஹோலி பெர்லிங் (Holly Ferling):
தனது 14 வயதில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து ஜூனியர் கிரிக்கெட் அணிக்காக முதல் முறையாக அறிமுகமான ஹோலி பெர்லிங், தனது முதலாவது போட்டியின் முதல் மூன்று பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு முதல் முறையாக தேர்வானார். தொடர்ந்து முதல் தர போட்டிகளில் விளையாடி வருகிறார். அளவற்ற அழகின் காரணமாக அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
இஷா குஹா (Isa Guha):
2012 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இஷா குஹா அதற்கு முன் ஏறத்தாழ 10 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடி உள்ளார். வேகப்பந்து வீச்சாளரான இஷா குஹா 2002ஆம் ஆண்டு தனது 17வது வயது இந்திய அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் களமிறங்கினார். மகளிர் ஆஷஸ் கிரிக்கெட்டில் 2007 -2008ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
சாரா ஜேன் டெய்லர் (Sarah Jane Taylor):
இந்த பட்டியலில் மற்றொரு இங்கிலாந்து வீராங்கனை சாரா ஜேன் டெய்லர். 2008ஆம் ஆண்டு ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆதிக்கம் செலுத்திய நபராக சாரா அறியப்படுகிறார். விக்கெட் கீப்பர், தொடக்க வீராங்கனை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என இங்கிலந்து அணியில் முக்கிய பங்காற்றி உள்ளார்.
லாரா மார்ஷ் (Laura Marsh):
வேகப்பந்து வீச்சாளராக கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய லாரா மார்ஷ், பின்னாட்களில் சிறந்த சுழற்பந்து வீராங்கனையாக மாறினார். இவரும் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கியத்தக்க வீராங்கனையாக அறியப்பட்டார்.
கேத்ரீன் பிரன்ட் (Katherine Brunt):
மற்றொரு இங்கிலாந்து வீராங்கனை கேத்ரீன் பிரன்ட். 2009 ஆம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 4 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி 6 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சனா மிர் (Sana Mir):
பாகிஸ்தானை சேர்ந்த சனா மிர், 2010 மற்றும்2014ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுள்ளார். மேலும், கடந்த 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டின் சிறந்த வீராங்கனை என்ற விருது வென்றுள்ளார்.
ஹர்லின் தியோல் (Harleen Deol):
இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் இன்ஸ்டாகிராம் ஃபேமாக காணப்படுகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் ஏறத்தாழ 15 லட்சம் பின்தொடர்வோரை ஹர்லின் தியோல் கொண்டுள்ளார். மேலும், ஆடுகளத்தில் தனது திறமையான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ள ஹர்லின், தற்போது இளைஞர்களை அதிகம் கவரும் நபராக காணப்படுகிறார்.
ஸ்மிரிதி மந்தனா (Smriti Mandhana):
இந்த பட்டியலில் மற்றொரு இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. ஆடுகளத்தில் வெளிப்படுத்தும் சிறப்பான செயல்பாடுகள் மட்டும் காரணமின்றி நேர்த்தியான திறன் மற்றும் கருணையின் காரணமாக மற்றவர்களை அதிகம் கவரும் நபராக காணப்படுகிறார். 16 வயதில் இந்திய அணிக்காக முதல் முறையாக அறிமுகமான ஸ்மிரிதி மந்தனா பல ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க: 3 பந்துகளில் 24 ரன்.. நோ பாலும் இல்ல.. ஒய்டும் இல்ல.. எப்படி சாத்தியம்? அடிச்சது யார் தெரியுமா?