பிரான்ஸ்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் யார் யாருக்கு என்னென்ன பதக்கங்கள் கிடைக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப் போட்டி ரத்து செய்யப்படும்.
அதன் பின் அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட் (Sarah Hildebrandt) இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளாமலேயே தங்க பதக்கம் வழங்கப்படும். அவர் போட்டியின்றி தங்க பதக்கம் பெறுவார். அதேபோல் வினேஷ் போகத்தின் தகுதி நீக்கத்தால் வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கல பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வினேஷ் போகத் பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம்! என்ன காரணம்? - paris olympics 2024