ஐதராபாத்: பெங்களூருவில் ஐபிஎல் நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.28) நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2025-27 ஐபிஎல் சீசன்களுக்கான விதிமுறை பட்டியல் வெளியிடப்பட்டது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Right to Match (RTM) எனப்படும் ஆர்டிஎம் மூலம் 1 வீரர் அதுதவீர 5 வீரர்கள் என மொத்தம் 6 வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆர்டிஎம் என்பது ஒரு வீரர் குறைந்தது 5 ஆண்டுகளாக தேசிய அணியில் விளையாடாத நிலையில், அவரை தனிப்பட்டை முறையில் தக்கவைத்துக் கொள்ள இந்த விதி வழிவகை செய்கிறது.
ஆர்டிஎம் என்றால் என்ன?:
அதேநேரம் ஆர்டிம் முறையில் தக்கவைக்கப்படும் வீரரின் ஊதியம் சற்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் பிசிசிஐ நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஆர்டிஎம் விதிமுறையை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக வழியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
கடைசியாக 2018ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் ஆர்டிஎம் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒவ்வொரு அணியும் மொத்தமுள்ள 5 தக்கவைப்பு வீரர்களில் இரண்டு வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 120 கோடி ரூபாய் வரை செலவழிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்ச ஊதியம் ரூ.157 கோடி:
ஏலத்தில் எடுக்கப்படும் தொகையை பொறுத்து வீரர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் அதுதவிர ஒவ்வொரு வீரருக்கும் போட்டி கட்டணம் மற்றும் போனஸ் தொகை கூடுதலாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு வீரர் ஒருவர் ஏலத் தொகை மற்றும் ஊதியம் வாயிலாக 110 கோடி ரூபாய் வரை பெற்ற நிலையில், 2025ஆம் ஆண்டு 146 கோடி ரூபாய் வரை பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் அந்த தொகை 2026ஆம் ஆண்டு 151 கோடி ரூபாயாகவும், 2027ஆம் ஆண்டு 157 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் 2025 ஐபிஎல் சீசன் மூலம் முதல் முறையாக வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஒவ்வொரு வீரரும் தங்கள் போட்டிக் கட்டணமாக 7.5 லட்ச ரூபாய் வரை பெறுவர் எனக் கூறப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகள் விளையாட தடை:
ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்து ஏலத்தில் கலந்து கொண்டு அணிகளால் ஏலத்தில் எடுக்கப்படும் வெளிநாட்டு வீரர், அந்த ஐபிஎல் சீசனில் விளையாடாத நிலையில், அடுத்த இரண்டு ஐபிஎல் சீசன்களுக்கு அவர் தடை செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஎம் முறை பயன்படுத்தி வீரர்களை தக்க வைக்கும் விதி இரண்டு அணிகளுக்கு பிரயோஜனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி விளையாடுவாரா:
சென்னை அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்த ஆர்டிஎம் முறையில் தக்கவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரேனும், இதே ஆர்டிஎம் முறையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தக்கவைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதில் தோனி 2019ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் கடைசியாக இந்திய அணிக்கு விளையாடினார். அதன்பின் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேபோல், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சுனில் நரேனுன் கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் தேசிய அணியில் விளையாடாமல் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: ஐபிஎல் வீரர்களுக்கு அடித்த அதிர்ஷடம்! ரூ.7.5 லட்சம் போனஸ் அறிவித்த ஜெய்ஷா! - IPL New Bonanza for players