ETV Bharat / sports

2வது ஆண்டாக பிக் பாஷ் லீக்கை புறக்கணிக்கு ரஷீத் கான்! என்ன காரணம் தெரியுமா? - Rashid Khan skip Big Bash League - RASHID KHAN SKIP BIG BASH LEAGUE

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலியா பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரை ரஷீத் கான் புறக்கணித்துள்ளார். என்ன காரணத்திற்காக அவர் புறக்கணிக்கிறார் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Rashid Khan (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 19, 2024, 6:44 PM IST

ஐதராபாத்: நடப்பாண்டுக்கான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடப் போவதில்லை என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 2023-24 பிக் பாஷ் லீக் சீசனில் ரஷீத் கான் விளையாடவில்லை. ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெண்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நிகழ்த்தப்படுவதாக கூறி அந்நாட்டுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா புறக்கணித்தது.

இதையடுத்து, கடந்த பிக் பாஷ் லீக் சீசனில் விளையாடப் போவதில்லை என்று ரஷீத் கான் தெரிவித்தார். இருப்பினும், தனது முடிவை மாற்றிக் கொண்ட ரஷீத் கான், பின்னர் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவதற்கான வீரர்கள் பட்டியலில் தனது பெயரை பதிவு செய்தார். ஆனாலும், முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் அந்த சீசனில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்நிலையில், நடப்பு பிக் பாஷ் லீக் சீசனிலும் ரஷீத் கான் பங்கேற்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ 20 லீக் தொடரில் எம்ஐ கேப் டவுன் அணிக்காக ரஷீத் கான் விளையாடி வருகிறார்.

பிக் பாஷ் தொடரில் அவர் விளையாட வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்க லீக் தொடரில் இருந்து அவர் பாதியிலேயே விலக வேண்டி வரும். மேலும், அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக காயம் ஏதும் ஏற்படாமல் தன்னை தற்காத்துக் கொள்ளவும், அதிகளவில் வேலைப்பளுவை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் பிக் பாஷ் தொடரில் கலந்து கொள்வதை ரஷீத் கான் தவிர்த்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிக் பாஷ் தொடரை ரஷீத் கான் புறக்கணிக்கவில்லை என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரஷீத் கான், பிக் பாஷ் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்து உள்ளார். இதுவரை 69 ஆட்டங்களில் விளையாடியுள்ள ரஷீத் கான் 98 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "உனக்கு ரொம்ப குசும்புயா"- ரசிகர்களின் கமென்ட்களுக்கு ஆளான பொல்லார்ட்! - Kieron Pollard

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.