ETV Bharat / sports

தோல்வியில் இருந்து மீண்டு வருமா குஜராத்? ஹைதராபாத் அணியுடன் இன்று மோதல்! - GT VS SRH MATCH PREVIEW - GT VS SRH MATCH PREVIEW

GT VS SRH MATCH PREDICTION: நடப்பு ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கவுள்ளது.

IPL 2024 Gt vs SRH
IPL 2024 Gt vs SRH
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 1:58 PM IST

அகமதாபாத்: 17வது ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நாட்டி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் (ஞாயிற்றுக்கிழமை) இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டியானது நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை சந்தித்துள்ளன.

இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திலும், குஜராத் அணி 7வது இடத்திலும் உள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் அணி, மார்ச் 26 ஆம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இதனால் 2 புள்ளிகளை இழந்தது மட்டும் அல்லாமல் மைனஸ் (-1.4525) ரன்ரேட்டில் உள்ளது. இதனை சரி செய்ய வரவிருக்கும் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரையில் மார்ச்.23 ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. அதற்கு அடுத்து மார்ச்.27ஆம் தேதி நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிராடியாக விளையாடி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பலம் மற்றும் பலவீனம்: கடந்த சீசனில் குஜராத் அணிக்கு பக்கபலமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நடப்பு சீசனில் பங்கேற்க முடியாமல் போனது அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் அவருக்கு மாற்றாக வந்த உமேஷ் யாதவ் செயல்படும் விதம் அணிக்கு திருப்திகரமாக இருக்கின்றது.

அதே போல் ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பேட்டிங்கை பொறுத்தவரையில் சுப்மன் கில், சாய் சுதர்சன், சஹா ஆகியேர் நன்றாக செயல்பட்டுவருகின்றனர். இருப்பினும் குஜராத் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான ராகுல் திவாட்டியா, டேவிட் மில்லர் ஆகியோர் பார்முக்கு திரும்பவில்லை என்பது சற்று அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட். மார்க்ரம் என பட்டையைக் கிளப்பும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், பந்து வீச்சில் சொல்லி கொள்ளும் அளவுக்கு இல்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே குஜராத் அணியை வீழ்த்த முடியும் என்பதை அறிந்து ஹைதராபாத் அணி செயல்படுமா? என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: LSG Vs PBKS:அபார பந்து வீச்சு..பஞ்சாபை பந்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.