டொரன்டோ : 2024 செஸ் கேண்டிடேட் தொடர் கனடாவின் டொரன்டோவில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற 8வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் டி.குகேஷ் மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தியை வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிட் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரேனை எதிர்கொள்ளும் வீரரை தேர்வு செய்வதற்கான கேன்டிடேட் செஸ் தொடர் தற்போது கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியாவை சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலி, குகேஷ், விஜித் உள்ளிட்ட 8 வீரர்கள் இந்த கேண்டிட் செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர்.
ரவுண்ட் ராபின் சுற்றுகள் அடிப்படையில் வெற்றி பெறும் நபர், விரைவில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனா சீனாவின் டிங் லிரேனை எதிர்கொள்ள உள்ளார். தமிழக வீரர் பிரக்ஞானந்தா, பிரான்சின் பிரூசா அலிரேசாவுடனான ஆட்டத்தை டிரா செய்தார்.
அதேபோல், 7வது சுற்றில் தோல்வியை தழுவிய இந்திய வீரர் குகேஷ், 8வது சுற்றில் மற்றொரு இந்திய வீரர் விதித் குஜராத்தியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் ரஷ்ய வீரர் இயன் நெபோம்னியாச்சியுடன் இணைந்தார். இதுவரை 8 சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இயன் நெபோம்னியாச்சி, இந்திய வீரர் குகேஷ் ஆகியோர் 5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழக வீரர் பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். விதித் குஜராத்தி 3.5 புள்ளிகள் பெற்று உள்ளார். மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பியை எதிர்த்து விளையாடிய தமிழக வீராங்கனை வைஷாலி அந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவினார். ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் வைஷாலியின் பிஷப் மற்றும் ரூக் காய்களை வீழ்த்திய ஹம்பி கடைசி வரை கடும் நெருக்கடி கொடுத்தார்.
ஆட்டத்தை டிரா நோக்கி வைஷாலி கொண்டு செல்ல முயற்சித்த போதிலும் இறுதியில் தோல்வியை தழுவினார். மகளிர் பிரிவில் கோனேரு ஹம்பி 3.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். தமிழக வீராங்கனை வைஷாலி 2.5 புள்ளிகளுடன் உள்ளார். இன்னும் 6 சுற்றுகள் நடப்பு தொடரில் மீதம் உள்ளன.
இதையும் படிங்க : "மோடியின் உத்தரவாதம்...." புல்லட் ரயில் முதல் இ-ஷ்ரம் போர்ட்டல் வரை... பாஜக தேர்தல் அறிக்கை கூறுவது என்ன? - Lok Sabha Election 2024