ETV Bharat / spiritual

வார ராசிபலன்: பெற்றோர் காதலை அங்கீகரித்து திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டும் நேரமிது..! - Weekly Rasipalan - WEEKLY RASIPALAN

Weekly RasiPalan in Tamil: ஜூலை 7ஆம் தேதி முதல் ஜூலை 13ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசிபலன்களைக் காணலாம்.

வார ராசிபலன் (கோப்புப்படம்)
வார ராசிபலன் (கோப்புப்படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 9:49 AM IST

மேஷம்: எதிர்பாராத விதமாக பணியிடத்தில் உங்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்படும். கூடுதலாக கடினமான உழைப்பும், முயற்சியும் தேவைப்படலாம். பணிபுரியும் பெண்கள் இந்த நேரத்தில் கூடுதல் சவால்களை சந்திக்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டியாளர்களின் கடுமையான போட்டியை சந்திக்கலாம். வெளிநாட்டில் தொழில் அல்லது வியாபாரம் செய்ய முயல்பவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். உங்கள் திருமண வாழ்வில் சந்தோஷம் நிலைத்துநிற்க உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

ரிஷபம்: நீங்கள் நீண்ட காலமாக உங்கள் தொழிலில், வாழ்க்கையில் முன்னேறுவதற்காக கடினமாக உழைத்து வந்தாலும், அதில் பலனைப் பெற மேலும் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும். உங்கள் உடல் நலத்தையும் பாதுகாக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறுவார்கள்.

மிதுனம்: நீண்ட காலமாக முடிக்கப்படாமல் கிடப்பில் கிடந்த உங்களுடைய திட்டமானது, வாரத்தின் தொடக்கத்தில் செல்வாக்கு மிக்க நபரின் உதவியுடன் முடிக்கப்படும். இந்த நேரத்தில், அதிகாரம் மற்றும் ஆட்சியில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நிலம் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான தகராறு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் ஒரு கூட்டாண்மையில் வியாபாரம் செய்கிறீர்கள் எனில், தொடர்வதற்கு முன் ஏதேனும் நிதி சிக்கல்கள் இருந்தால் அதை முன்கூட்டியே சரி செய்யுங்கள். தேர்வுகள் மற்றும் போட்டிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வரக்கூடும்.

கடகம்: தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும், ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தில் பணத்தை இழக்க நேரிடும். பதவி உயர்வு அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படலாம். வீடு மனை வாங்கி விற்பதன் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்திற்காக எந்த ஒரு பெரிய முடிவை எடுத்தாலும், உங்கள் பெற்றோர் முழு ஒத்துழைப்பு கொடுத்து உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். நீங்கள் ஒரு தொழிலைத் தொடங்குவது அல்லது வெளிநாட்டில் வணிகம் செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால், தடைகள் நீக்கப்படும்.

சிம்மம்: உங்கள் உடல்நலம் மற்றும் உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மோசமான உடல்நலம் உங்கள் வேலை செய்யும் திறனில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை இழந்ததால் உங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படலாம். ஒரு சிறிய தவறு கூட உங்கள் நற்பெயரை குறைக்கலாம். வாரத்தின் பிற்பாதியில், நீங்கள் எதிர்பாராத விதமாக ஒரு கடுமையான நிலம் மற்றும் சொத்து பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஒரு நல்ல திருமண உறவு நீடித்து இருக்க உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை மதிக்கவும்.

கன்னி: வணிக கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இந்த வாரம் முற்றிலும் சிறப்பாக இருக்கும். வேலை மாற்றத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு வார இறுதிக்குள் ஒரு பெரிய நிறுவனத்திடமிருந்து வேலைக்கான அழைப்பு வரலாம். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவது பற்றி யோசித்து வருகிறீர்கள் என்றால், உங்கள் விருப்பம் நிறைவேறும் காலம் இது. வாரத்தின் இரண்டாம் பாதியில், உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் ஒரு பெரிய ஆடம்பர பொருளை நீங்கள் வாங்கலாம்.

துலாம்: ஒரு சர்ச்சை காரணமாக நீங்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருக்கலாம்; இருந்தாலும்கூட, எந்தவொரு விவகாரமும் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சமரசத்தின் மூலம் தீர்க்கப்பட வேண்டும். வாரத்தின் தொடக்கத்தில் உங்கள் தம்பி அல்லது சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் உங்கள் மன வலிக்கு காரணம் ஆகலாம். சக ஊழியர்கள் கூறும் சிறு சிறு கருத்துக்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருப்பதற்கு பதிலாக அவற்றைப் புறக்கணிப்பதே நல்லது.

விருச்சிகம்: உங்கள் முந்தைய முயற்சிகள் மற்றும் கடின உழைப்பிற்கான சிறந்த பலன்களை இப்போது நீங்கள் காணலாம். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான சில நல்ல தகவல்களைப் பெறலாம். வாரத்தின் பிற்பாதியில், மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையலாம். நீங்கள் ஏதேனும் ஒரு தேர்வு அல்லது போட்டிக்குத் தயாராகும் வண்ணம் கடினமாக உழைத்தால் நீங்கள் விரும்பிய வெற்றியைப் பெறுவீர்கள்.

தனுசு: நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியையும் லாபத்தையும் பெறலாம். உத்தியோகத்தில் இருக்கும் பெண்மணிகள் அவர்கள் பணியிடத்தில் சிறந்த சாதனைகள் புரிவார்கள். இதனால், பணியிடத்திலும் குடும்பத்திலும் அவர்களின் மதிப்பும், மரியாதையும் உயரும். திருமணமாகாதவர்களுக்கு வரன்கள் கிடைக்கும். காதல் உறவில் இருப்பவர்களின் பெற்றோர் உங்கள் காதலை அங்கீகரித்து திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்ட வாய்ப்புள்ளது.

மகரம்: உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சில பெரிய செலவுகள் திடீரென்று தோன்றி உங்கள் நிதி நிலையை பாதிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கும் பணிச்சுமை திடீரென அதிகரிக்கலாம். உங்கள் குடும்பப் பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கவும். இந்த வாரம், உங்கள் காதல் துணையுடனான எந்த தவறான புரிதலும் உங்கள் காதல் உறவை பாதிக்கலாம்.

கும்பம்: நீங்கள் சோம்பேறித்தனம் அல்லது கர்வம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் மிகுந்த நஷ்டமடைய நேரிடும். நிதி பரிவர்த்தனைகளை நடத்தும்போது, நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு திட்டத்திலும் அல்லது நிறுவனத்திலும் பணத்தை எச்சரிக்கையுடன் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் திருமண பந்தத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள, உங்கள் மனைவியை உதாசினம் செய்யாதீர்கள்.

மீனம்: கடின உழைப்பு மற்றும் உறுதியால் மட்டுமே உங்கள் இலக்குகளை அடையமுடியும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பணியை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் முறையாக தாங்களே முடிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் முதலாளியின் கோபத்திற்கு நீங்கள் ஆளாகலாம். பணியாளர்களுக்கு கூடுதல் வருமான ஆதாரங்கள் அமையும். வணிகர்கள் வாரத்தின் முதல் பகுதி சற்று மந்தமாக இருப்பதைக் காணலாம். ஆனால், இரண்டாவது பாதி லாபகரமாக இருக்கும். உங்களின் அனைத்து செல்வமும் உயரும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.