ETV Bharat / spiritual

வார ராசிபலன்: சிங்கிளாகவே இருந்த நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் விழும் நேரம் இது! - அதிர்ஷ்டக்கார ராசி யார்? - Weekly Rasipalan - WEEKLY RASIPALAN

Weekly RasiPalan in Tamil: ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 20ஆம் தேதி வரையிலான 12 ராசிகளின் வார ராசிபலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 9:08 AM IST

மேஷம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும், ஆனால் கொடுக்கல் வாங்கல்களை நடத்தும் போது எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் மற்றவர்களை கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்கவும். காதல் உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் காதல் துணையுடன் அன்பும் நல்லிணக்கமும் வளரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ரிஷபம்: தனித்துவமான அம்சம் என்னவென்றால், உங்களின் பரபரப்பான வேலைக்கு நடுவில், நெருங்கிய நண்பர்களின் உதவி கூட குறைவாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு , வாரத்தின் தொடக்கம் அவ்வளவு சிறந்ததாக இருக்காது. ஆனால் வார இறுதியில் கிடைக்கும் எதிர்பாராத லாபம், உங்கள் கொண்டாட்டத்திற்கு ஒரு காரணமாக இருக்கும். நிலம், வீடுமனை தொடர்பான விவகாரங்கள் உங்களுக்கு மிகுந்த கவலையைத் தரும். உங்கள் காதல் உறவில் ஏற்படும் சில தவறான புரிதல்களை, சரி செய்ய வாதிடுவதற்குப் பதிலாக ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தீர்க்க முயற்சிக்கவும்.

மிதுனம்: உங்கள் அன்றாட பழக்கவழக்கம், உணவு முறை மற்றும் பலவற்றில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இந்த கட்டத்தில், மாணவர்கள் அவர்கள் படிப்பில் இருந்து திசை திருப்பப்படலாம். காதல் உறவில் தீவிரம் இருக்கும். உங்கள் காதல் துணை வார இறுதியில் ஒரு பரிசைக் கொடுத்து உங்களை ஆச்சரியப்படுத்தலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கடகம்: வணிகத்தில் உள்ளவர்கள் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும். வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமரசம் செய்வதில் சிரமப்படலாம். நீங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழவிரும்பினால் உங்கள் வாழ்கைத்துணைக்கு சற்று நேரம் ஒதுக்குங்கள். காதல் ரிலேஷன்ஷிப் பொறுத்தவரையில், நல்ல வாரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.

சிம்மம்: வேலையில் இருப்பவர்களுக்கு வாரத்தின் ஆரம்பம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக நிலம், சொத்துக்களை வாங்கவும் விற்கவும் விரும்பினால், உங்கள் கனவு இந்த வாரம் நிறைவேறலாம். ஒரு செல்வாக்குமிக்க நபரை நீங்கள் சந்திப்பீர்கள்அவரின் உதவியால் உங்கள் நிதிநிலைமை முன்னேறும் மற்றும் தொழிலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். உங்கள் காதல் உறவு உறுதியானதாக இருக்கும். காதல் உறவுகள் திருமணத்திற்கும் வழிவகுக்கும்.

கன்னி: எந்த ஒரு முக்கியமான தொழில் அல்லது வியாபார முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். உங்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை என்றால், ஒரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரிடம் ஆலோசனை பெறுங்கள். வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு புதிய திட்டத்திலும் முதலீடு செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடினமான சூழ்நிலைகளில், உங்கள் அன்பான துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

துலாம்: உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றாலும், எதிர்பாராத நிறுவன லாபம் உங்கள் திருப்தியை அதிகரிக்கும். நலம் விரும்பிகளின் உதவியுடன் வார இறுதிக்குள் பல முக்கிய பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். காதல் தொடர்பில், காதல் துணையுடனான நெருக்கம் வளரும். உங்கள் காதல் திருமணத்திற்கு குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் அளிப்பார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மேலும், உங்கள் மனைவியுடன் அற்புதமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்: ஒரு குடும்ப விஷயம் தொடர்பாக உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது பேசுவதையும் பொருத்தமற்ற முறையில் நடந்து கொள்வதையும் தவிர்க்கவும். இல்லையெனில், நீங்கள் பின்னர் வருத்தப்படலாம். உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட காதல் உறவில், முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் திருமண பந்தம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் உங்கள் வாழ்கைத் துணையின் சென்டிமெண்டுகளை மதிக்க கற்று கொள்ளுங்கள்.

தனுசு: உங்கள் இலக்கை அடைய வேண்டும் என விரும்பினால் நீங்கள் கூடுதலாக கடின உழைப்பையும் முயற்சியையும் எடுக்க வேண்டியிருக்கும். கடுமையான் சூழ்நிலைகள் இருந்தபோதிலும், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

மகரம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள், வரன்கள் கிடைக்கும். சிங்கிளாக இருப்பவர்களுக்கு ஒரு ரிலேஷன்ஷிப் ஏற்படலாம். ஒருவருடனான சமீபத்திய நட்பு காதலுக்கு வழிவகுக்கும். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், வேலை தேடுவதற்கான எந்த முயற்சியும் உங்களுக்கு நல்ல பலனளிக்கும். வீட்டில் ஏதாவது ஒரு சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம்.

கும்பம்: இந்த வாரத்தின் ஆரம்பம் கும்பம் நபர்களுக்கு சவாலாக இருக்கலாம். உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதைக் செயல்படுத்த மிகவும் உதவியாக இருப்பார்கள். அதிகாரம் மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வேலைகள் ஒரு செல்வாக்கு மிக்க நபரின் உதவியுடன் நிறைவு பெறும். இருப்பினும், இந்த கடினமான காலம் நீண்ட காலம் தொடராது. காதல் உறவு உறுதியாக இருக்கும். காதல் துணை தொடர்பான ஒரு சிறந்த சாதனையால் மனம் மகிழ்ச்சி அடையும்.

மீனம்: பணியிடத்தில் சீனியர்கள் மற்றும் ஜூனியர்கள் இருவரிடமிருந்தும் நீங்கள் முழுமையான ஆதரவைப் பெறுவீர்கள். இது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே உங்கள் பணியை முடிக்க உதவும். காதல் உறவுகள் வலுவாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்திற்குள் ஒரு சுப காரியம் சிறப்பாக நடைபெறும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.