ETV Bharat / spiritual

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருநாள்: பரணி தீபம் ஏற்றி பக்தி முழக்கமிட்ட பக்தர்கள்! - TIRUVANNAMALAI BHARANI DEEPAM

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
திருவண்ணாமலை கோயிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 10:30 AM IST

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 4-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோயிலில் கடந்த 9 நாட்கள் காலையிலும், இரவிலும் பல்வேறு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலாவும், கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட்டுள்ளது.

பரணி தீபம்:

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம் (ETV Bharat Tamil Nadu)

தீபத் திருவிழாவின் 10ஆம் நாளான இன்று (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.அதனைத்தொடர்ந்து, ஏகன் அனேகனாகவும், அனேகன் ஏகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக, அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்பு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

இதையு படிங்க: "அண்ணாமலையாருக்கு அரோகரா" - திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் முழு விவரம்!

தொடர்ந்து, அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தினை, சிவாச்சாரியர்கள் கோயில் உட் பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு சென்று, கோயிலில் உள்ள அம்மன், விநாயகர், முருகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு பரணி தீபத்தினை ஏற்றியுள்ளனர். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அண்ணமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்துள்ளனர்.

திருக்கார்த்திகை தீபம்:

திருவண்ணாமலையில் பரணி தீபம்
திருவண்ணாமலையில் பரணி தீபம் (ETV Bharat Tamil Nadu)

அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட தீப மலையில் இன்று மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அர்த்தநாரீஸ்வரர் உருவம் பதித்த, 6.5 அடி உயரமுள்ள தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நேற்று கொட்டும் மழையிலும் மலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையு படிங்க: திருவண்ணாமலை மகா தீபம்; "மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை" - மாவட்ட ஆட்சியர் திட்டவட்ட அறிவிப்பு!

ஆனால், மலைப்பகுதியின் ஈரப்பதம், பாறை உருளும் தன்மை, மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் நடக்கும் பாதையில் வழுக்கும் என்பதால், மகா தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடுவோர் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

இந்த ஆண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்வதற்கு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும், திருவண்ணாமலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து வசதி மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.