ETV Bharat / spiritual

புட்டுக்கு மண் சுமந்த கதை தெரியுமா? மதுரையில் களைகட்டிய ஆவணி மூலத் திருவிழா! - madurai Avani Moola festival - MADURAI AVANI MOOLA FESTIVAL

Madurai Avani Moola Festival: ஆவணி மூலத் திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று மதுரை வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பில் சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த லீலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

புட்டுக்கு மண் சுமந்த லீலை
புட்டுக்கு மண் சுமந்த லீலை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 3:45 PM IST

Updated : Sep 13, 2024, 4:09 PM IST

மதுரை: மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனிடமிருந்து சிவபெருமான் செங்கோல் பெற்ற நிகழ்வு, மதுரை மீனாட்சி கோயிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், ஆவணி மூலத் திருவிழாவின் 9ஆம் நாளான இன்று (செப்.13) புட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வு நடைபெற்றது.

புட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்வு (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்வு மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பில் இன்று பிற்பகல் 1.05 மணிக்கு மேல் 1.29 மணிக்குள் தனுர் லக்கனத்தில் மண்சாத்துதல் நிகழ்வு நடைபெற்றது. மேலும், “வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்த வீட்டிற்கு ஒருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிட்டார்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: மதுரை முக்குறுணி விநாயகருக்கு 18 படியில் மெகா கொழுக்கட்டை படையல்..!

வந்தி என்னும் புட்டு விற்கும் கிழவிக்கு ஒருவருமில்லை. இறைவனே கூலியாளாக வடிவெடுத்து வந்து வந்தி தந்த புட்டுக்காக மண் சுமக்கிறேன் என்று கூறினார். ஆனால், தன் பங்கு கரையை அடைக்காமல் புட்டு உணவை உண்டு, ஆடிப்பாடி கடம்ப மரத்தின் அடியில் ஆழ்ந்த துயில் கொண்டார்.

பார்வையிட வந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் தன் கையிலிருந்த பிரம்பால் அவர் முதுகில் அடிக்க அனைத்து உலக உயிர்களின் முதுகிலும் அந்த அடி விழுந்தது. அரசன் உண்மையை உணர்ந்தான். அதாவது, சிவன் உலகிற்கு மாணிக்கவாசகர் பெருமையையும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும் இவ்வாறு செய்ததாக மன்னனிடம் உரைத்தார்.

அதையடுத்து, மன்னனும் மாணிக்கவாசகரை இறைபணிக்கு விடுவித்து, அரசனும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தான் என்பது திருவிளையாடல் புராணம். அதன் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் நடைபெறும் இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சிவனின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்” என்பது ஐதீகம்.

Last Updated : Sep 13, 2024, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.