மேஷம்: சில முடிவுகள் எடுப்பது கடினமாக இருந்தாலும், நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் எளிதாக முடிவெடுக்கலாம். உங்களது நோக்கம், உணர்வு ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், முடிவு ஒன்றை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றப் பாதையில், சிறிது நிதானமாக செயல்படவும்.
ரிஷபம்: இன்று, நிச்சயமாக பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுவதற்கான நாள் அல்ல (அது சாதரணமான விஷயங்களுக்காக என்றாலும் கூட). புதிய திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் காதல் துணையுடன், உல்லாசமாக இருத்தல் அல்லது ஸ்பாவில் இளைப்பாறுதல் போன்றவற்றின் மூலம் உங்கள் சோம்பல் நீங்கலாம். எப்படி இருந்தாலும், உங்களுக்கு செலவு ஏற்படும் நாள் இது.
மிதுனம்: செயல்கள் மற்றும் உணர்ச்சிகள் இடையே சமநிலையை பராமரிக்க நீங்கள் பெரிதும் முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றி அடையவில்லை என்றாலும் கூட உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பழகும் போது பெரிதும் ஏமாற்றம் ஏதும் இருக்காது. உங்கள் காதல் துணையுடன் நீங்கள் சிறந்த வகையில் நேரத்தை செலவிடுவீர்கள். ஆனால் உங்கள் உடல் தோற்றம், உங்களுக்கு சிறிது கவலையை ஏற்படுத்தலாம்.
கடகம்: இன்று, உங்களுக்கு நாள் முழுவதிலும் ஒரு தீவிரமான மனநிலை காணப்படலாம். குறிப்பாக, சிறிது குழப்பமான மனநிலை இருக்கலாம். எனினும், நீங்கள் உணர்ச்சி ரீதியாக சிந்திக்கக் கூடாது, நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், பிரச்சனையான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் உடல் நலத்தின் மீதும் உணவு பழக்க வழக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். உணவுப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்: குடும்பத்தில் உள்ள இளைய உறுப்பினர்கள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகள் தனது தினசரிக் கடமைகளை சிறந்த முறையில் செய்ய வழிகாட்டியாக இருப்பீர்கள். கொண்டாட்டம் மேற்கொள்வதற்கான சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். ஏதேனும் போட்டி அல்லது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள்.
கன்னி: முன்னதாக நீங்கள் செய்த சிறந்த பணிகளுக்காக உங்களுக்கு வெகுமானம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்களின் ஆலோசனை பெறுவதற்கு பதிலாக, நீங்களே காரியத்தை செய்து முடிக்க விரும்புவீர்கள். எனினும் நீங்கள், சுற்றி நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமையாகவும் அமைதியாகவும் செயல்பட வேண்டும்.
துலாம்: உங்கள் தோற்றம் மற்றும் அழகின் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் அழகை மேம்படுத்திக் கொள்ள, அழகு சாதன பொருட்களை வாங்குவீர்கள் அல்லது அழகு நிலையத்திற்கு சென்று அழகுபடுத்திக் கொள்வீர்கள். உங்களது அழகையும் தோற்றத்தையும் மேம்படுத்த, உங்களுக்கு ஏற்ற ஆடைகளை வாங்க நீங்கள் கடைகளுக்கு செல்வீர்கள்.
விருச்சிகம்: உங்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். உற்சாகம் தரக்கூடிய எதுவும் நடக்கும் சாத்தியம் இல்லை. எனினும், உற்சாகமாக செயல்பட்டு, வாழ்க்கையில் சுவாரசியத்தை புரிந்து கொண்டு முன்னேற தொடர்ந்து முயற்சி செய்யவும். கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக எப்பொழுது மாறும் என்று சொல்ல முடியாது. உற்சாகமான எதிர்காலம் காத்திருக்கிறது. நம்பிக்கை இழக்க வேண்டாம்.
தனுசு: இன்று வலிகளும் இல்லை, ஆதாயங்களும் இல்லை. எனவே, உங்கள் பணியில் கவனம் செலுத்தி, கடினமாக உழைக்கவும். அதற்கான பலன்கள் சிறந்ததாக இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆனந்தமாக நேரம் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இன்று வேடிக்கை விளையாட்டுக்கள் நிறைந்த நாளாக இருக்கும்.
மகரம்: நம்பிக்கை என்பதே, வெற்றி என்ற கதவை திறக்கும் சாவியாகும். இன்று, உங்கள் நேர்மறையான மனப்பான்மை மற்றும் நடவடிக்கையின் காரணமாக, வெற்றியை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னேறி செல்வீர்கள். நீங்கள் எதையும் அலட்சியப்படுத்தும் நபர் அல்ல. உங்களது சாதனைகளை நீங்கள் மதிப்பீடு செய்து, அறிவார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள்.
கும்பம்: இன்று, கொண்டாட்டங்களில் பங்கேற்க, வாய்ப்பு ஏற்படும். அது நண்பரின் திருமணம் தொடர்பான தகவலாக இருக்கலாம் அல்லது நீங்கள் புதிய கார் வாங்கும் வாய்ப்பும் உள்ளது, அல்லது இன்று உங்கள் வாழ்க்கையை நினைத்து நீங்கள் சந்தோஷம் கொள்ளும் நாளாகவும் இருக்கலாம். இது தவிர, இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு சுமுகமாகவே இருக்கும். நீங்கள் வர்த்தகம் அல்லது தொழில் துறையில் இருப்பவர் என்றால், உங்கள் இலக்கை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னேறுவீர்கள்.
மீனம்: இன்றைய நாள், உங்களுக்கு குழப்பம் நிறைந்த நாளாகவும் நிச்சயமற்ற தன்மை உள்ள நாளாகவும் இருக்கும். இதனால் உங்கள் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட்டு, பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் சிரமம் ஏற்படும். சச்சரவில் இருந்து விலகி இருக்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து, உங்களது தினசரி பணியின் மீது மட்டும் கவனம் செலுத்தவும்.