ETV Bharat / opinion

இந்திய செமிகண்டக்டர் துறையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்! உலகின் சிப் மேக்கராக மாறுமா இந்தியா? நிபுணர் கூறுவது என்ன? - World Semiconductor market - WORLD SEMICONDUCTOR MARKET

Indian Semiconductor Industry: இந்திய செமிகண்டக்டர் தொழில்துறையில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து பேராசிரியர் முனைவர் ராதா ரகுராமபத்ருணி விவரிக்கிறார்...

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 4:11 PM IST

Updated : Apr 2, 2024, 4:25 PM IST

ஐதராபாத் : உள்நாட்டிலேயே செமி கண்டக்டர் சிப் உற்பத்தி செய்ய 21 பில்லியன் டாலர் மதிப்பிலான முன்மொழிவுகளை மத்திய அரசு மதிப்பாய்வு செய்து வருகிறது. இதில் இந்தியாவில் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு பணியில் ஈடுபட உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.

இதில் இஸ்ரேலை சேர்ந்த டவர் செமிகண்டக்டர் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 9 பில்லியன் டாலர் மதிப்பில் செமிகண்டக்டர் சிப் ஆலையை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. அதேநேரம் உள்நாட்டு பெருநிறுவனமான டாடா நிறுவனமும் அதே குஜராத்தில் 8 பில்லியன் டாலர் மதிப்பில் செமி கண்டக்டர் ஆலையை திறக்க தீவிரம் காட்டி வருகிறது.

செமி கண்டக்டர் துறை கண்டு வரும் வளர்ச்சி புவிசார் குறியீட்டின் அதிக போட்டிமிக்க களமாக மாறி வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் உள்நாட்டு சிப் உற்பத்தியை பலப்படுத்த தீவிரமாக முயன்று வருகின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச நிறுவனங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு சலுகைகள் உள்ளிட்டவைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்த முயற்சி, விலையுயர்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்து, இந்தியாவில் ஸ்மார்ட்போன் அசம்பிளி உள்ளிட்ட தொழிகளை விரிவுபடுத்த நோக்கமாக கொண்டு உள்ளது.

சிப் உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிக்க ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஆகும் செலவுகளில் பாதியை மானியமாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் இதற்காக 10 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் இந்த துறையில் ஏற்பட்ட சறுக்கல்கள் காரணமாக, செமிகண்டக்டர் துறையில் தன்னிறைவு பெறும் நோக்கத்தில் இந்தியா நிலையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, இந்த திட்டத்திற்கு தேவையான நிதி பங்களிப்பு மற்றும் முதலீடுகளை பெரும் டெக் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் கூகுள் மூலம் பெற்று இந்திய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை இந்தியாவில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

அதேபோல், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் நிறுவனமும் இந்த ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து செல்போன் அசம்பிளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜி இன்க் செமிகண்டக்டருக்கு தேவையான நிதியை வழங்கி வருகிறது.

இதற்காக குஜராத்தில் 2 புள்ளி 75 பில்லியன் டாலர் மதிப்பிலான அசம்பிளி மற்றும் சோதனை மையத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குஜராத்தில் உள்ள தோலேரா என்ற டவுனை செமி கண்டக்டர் சிப் தயாரிப்புகான மையமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டவர் செமி கண்டக்டர் நிறுவனம் தனது முன்மொழியப்பட்ட ஆலை மூலம் 10 ஆண்டுகளில் மாதத்திற்கு 80 ஆயிரம் சிலிக்கான் சிப்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளது. அதேபோல் டாடா குழுமமுன், பவர் சிப் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிப்புக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த இரண்டு திட்டங்களும் நாட்டின் நுகர்வோர் எலக்ட்ரானிக், வாகன தொழிற்சாலை, மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான தேர்ந்த செமிகண்டக்டர் சிப்களை வழங்குவதையே நோக்கமாக கொண்டு உள்ளன. அதேநேரம், நாட்டின் கிழக்கு பகுதியில் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான பேக்கேஜிங் ஆலையை நிறுவ டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இந்த முயற்சியின் மூலம் நாட்டில் ஸ்மார்ட்போன் பாகங்கள் மற்றும் அசெம்பிளி ஆகியவற்றில் தற்போதுள்ள வளர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு, உயர் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடுகளை பெருக்குவதற்கான முயற்சியில் டாடா நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் ஜப்பானை சேர்ந்த Renesas Electronics Corp நிறுவனம், இந்தியாவில் சிப் பேக்கேஜிங் துறையில் இணைந்து பணியாற்றி சரியான கூட்டாளியை தேடி வருகிறது. அனைத்து சிப் தொடர்பான முன்மொழிவுகளுக்கு அடுத்த சில வாரங்களில் மத்திய கேபினட் அமைச்சகத்தால் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் மானியங்களை பெற முன்மொழிவுகளை சமர்பித்து உள்ள நிறுவனங்கள் விரிவான தகவல்கள், தொழில்நுட்ப கூட்டாளிகள், நிதி சார்ந்த ஏற்பாடுகள், மார்க்கெட் இலக்கு உள்ளிட்ட செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான அனைத்து தகவல்களையும் விரைவாக வழங்க தயாராக இருக்க வேண்டும்.

20வது நூற்றாண்டில் எண்ணெய்க்காக உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், 21வது நூற்றாண்டில் செமிகண்டக்டர் சிப்களுக்கான போட்டியாக மாறி உள்ளது. இந்த சிப்கள் மூலம் கார்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், ஆயுதம் உள்ளிட்ட நவீன யுகத்திற்கு தேவையான பல்வேறு பொருட்களை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவையாக உள்ளது.

உலகளவில் 570 பில்லியன் டாலர் சந்திப்பை சிப் உற்பத்தி சந்தை கொண்டு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலராக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் சிப்களுக்கான சந்தை மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது. டிசைனிங், உற்பத்தி மற்றும் அசம்பிளிங் ஆகிய மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இதில் சிப் டிசைனிங் துறையில் உலகளவில் அமெரிக்கா கொடி கட்டி பறக்கிறது. இந்த துறையில் அமெரிக்க நிறுவனங்கள் ஏறத்தாழ 46 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் சிப் டிசைன் மென்பொருள் மற்றும் உரிமம் விற்பனை உள்ளிட்ட துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் 76 சதவீதம் ஆக்கிரமித்து உள்ளது.

சிப் டிசைன் தைவான் போன்ற உலகின் பிற இடங்களில் தயாரிக்கப்படுகின்றன, இது சிப் உற்பத்தி சந்தையில் 50 சதவீதம் வரை உள்ளது. இரண்டாவதாக தென் கொரியா 17 சதவீத சிப் உற்பத்தியையும், அதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

சிப் அசம்பிளிங்கை பொறுத்தவரை சீனா, தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவில் அதிகளவிலான தொழிற்சாலைகள், அதிக அசம்பிள் நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்டத்தக்க வகையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், இந்தியாவின் தற்போதைய சிப் சந்தை மதிப்பு 35 புள்ளி 18 பில்லியன் டாலராக உள்ளது. 2026ஆம் ஆண்டில் அது சுமார் 64 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சிப் சந்தை மதிப்பு இந்தியாவில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபரிவிதமான வளர்ச்சியை கண்டு சிப் தொழில்துறையை இந்தியா எவ்வாறு கையாளப் போகிறது என்பது தான் அடுத்தக் கேள்வி. சிப் தொழில்துறையின் செயல்பாட்டிற்கு ஏராளமான திறமையான பணியாளர்கள் தேவை. இந்தியா அதன் திறமையான மற்றும் ஏராளமான தொழிலாளர் சக்தியின் நன்மையைப் பெற முடியும்.

தற்போதைய புவிசார் சூழலில் பெரும்பாலான நாடுகள் சிப்களுக்கு தைவானையே பெரிது எதிர்பார்த்து உள்ளது. அதேநேரம் தைவானை, சீனா கைப்பற்றும் நிலையில் அதன் சந்தையும் கடுமையாக பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம் உலகளாவிய நாடுகளின் உந்துதலால் சிப் சந்தையை பல்வகைப்படுத்துவதன் மூலம் இந்தியா பலன் அடையும்.

அதேநேரம் இந்த விவகரத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் செமிகண்டக்டர் விநியோகம் தொடர்பாக உள்கட்டமைப்பை மேம்படுத்த அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டு உள்ளது. இது தொடர்பான இயக்கங்களும் கடந்த 2021ஆம் ஆண்டு குவாட் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

இதனுடன் இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சிப்களுக்கு உள்நாட்டு தேவை அதிகமாக இருப்பது தொழில் விரிவாக்கத்தில் கூடுதல் நன்மையாக இருக்கும். அதேநேரம், சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் சிப் சந்தை மதிப்பு 7 மடங்கு குறைந்ததாகும். இந்தியா சிப் சந்தை மதிப்பு பெருக்கும் திட்டத்திற்காக 143 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அடுத்ததாக சிப் சந்தை என்பது ஒரு கார்டெல் குழுவாகும், அதில் நுழைவதும் வெளியேறுவதும் மிகக் கடினம் மற்றும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும், ஏனெனில் அவை நிறைய நிபந்தனைகள், தொழிலாளர் தரநிலைகள் மற்றும் அடைய வேண்டிய இலக்குகளை கொண்டிருக்கலாம்.

எவ்வாறாயினும், ஆத்மா நிர்பார் பாரத் மற்றும் தற்சார்பு இந்தியாவின் பணியை வைத்து, ஜூலை 2023ஆம் ஆண்டு செமிகான் இந்தியா-2023 2வது பதிப்புடன், 2035 ஆம் ஆண்டில் 3 முதல் 4 சதவீதத்துடன் 1 டிரில்லியன் டாலர் சந்தையை இலக்காக கொண்ட இந்தியாவின் திட்டம் குறிப்பிட்டத்தக்க வகையில் உலகளாவிய சந்தை மதிப்பை காட்டிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய செமிகண்டக்டர் பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்கும் உற்பத்தியாளர்களை இந்தியாவில் செமிகண்டக்டர் ஆலையை அமைக்க ஊக்குவிப்பதற்காகவும் மத்திய அரசு இந்திய செமிகண்டக்டர் மிஷன் என்ற திட்டத்தை நிறுவி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு நான்கு திட்டங்களை வெளியிட்டுள்ளது. அது நோடல் ஏஜென்சியாக, பெறப்பட்ட விண்ணப்பங்களின் தொழில்நுட்ப மற்றும் நிதி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும், விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பதற்கும் மற்றும் மின்னணு மற்றும் தகவல் அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்ட பிற பொறுப்புகளை செய்வதற்கும் வழிவகுக்கிறது.

அந்த நான்கு திட்டங்கள்: இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டம், இந்தியாவில் டிஸ்ப்ளே அலைகளை அமைப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டம், இந்தியாவில் கம்பவுண்ட் செமிகண்டக்டர் மற்றும் ஏடிஎம்பி வசதிகளை அமைப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட திட்டம் மற்றும் வடிவமைப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் ஆகியனவாகும்.

இந்திய செமிகண்டக்டர் மிஷனை ஆதரிக்கும் நோக்கில், நாட்டின் சில மாநிலங்களும் செமிகண்டக்டர் தொழில்துறைக்கான குறிப்பிட்ட கொள்கைகளை உருவாக்கி, நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகளையும் வழங்குவதாக அறிவித்து உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டில் குஜராத் பிரத்யேக செமிகண்டக்டர் கொள்கையை முதல் முதலாக கொண்டு வந்த முதல் மாநிலமாக உருப்பெற்றது, அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் பிரத்யேக செமி கண்டக்டர் கொள்கைகளை கொண்டு வந்தன.

பொருளாதார தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு:

குஜராத்தில் உள்ள செமிகண்டக்டர் ஆலை வெறும் தொழில்நுட்ப முயற்சி மட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சிக்கான வழித்தடமாக உள்ளது. இது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிராந்திய வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.

இந்த செமிகண்டக்டர் ஆலைகளை அனுமதிப்பதில், இந்தியா தொழில்நுட்பத்தில் மட்டும் முதலீடு செய்யவில்லை, அதன் எதிர்கால திட்டங்களிலும் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கி வருகிறது. உலகளாவிய சிப் மேக்கர் என்ற இடத்தை பிடிப்பதற்காக முயற்சியில் இந்தியா தீவிர்மாக ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க : ராமோஜி அகடாமி ஆப் பிலிம்ஸ் இலவச திரைப்பட பயிற்சி வகுப்புகள்! எப்படி விண்ணப்பிப்பது? - Ramoji Academy Of Movies

Last Updated : Apr 2, 2024, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.