ETV Bharat / opinion

"காலநிலை நெருக்கடியை கையாளுபவர்களுக்கே ஓட்டு" - 52% முதல்முறை வாக்காளர்களின் முடிவு - First Time Voters on Climate Crisis

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 2:06 PM IST

First Time Voters in Climate Crisis in India: 'காலநிலை நெருக்கடியை சிறப்பாகக் கையாளுபவர்களுக்கே வாக்களிப்போம்' என 'இந்தியாவில் காலநிலை கல்வி குறித்த முதல் முறை வாக்காளர்களின் கருத்து' என்ற ஆய்வில் 52% முதல் முறை வாக்காளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளம்வாக்காளர்களிடையே மேற்கொண்ட ஆய்வில், கால நெருக்கடியை சிறப்பாக கையாளும் கட்சிகளுக்கே நாங்கள் வாக்களிப்போம் என 52% முதல்முறை வாக்காளர்கள் கூறியுள்ளனர். அதே சமயம், இந்த ஆய்வு முதல் முறை வாக்காளர்களிடையே சுற்றுச்சூழல் - காலநிலை கல்வி குறித்த வேறுபாட்டை அறிந்து கொள்வதில் சரியான புரிதல் ஏற்படவில்லையோ என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல் முறை வாக்காளர்களான 1,600 பேர்களுக்கு இடையே 'இந்தியாவில் காலநிலை கல்வி குறித்த முதல் முறை வாக்காளர்கள்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வை அசார், காலநிலை கல்வியாளர்கள் நெட்வொர்க், சிஎம்எஸ்ஆர் ஆகியோர் இணைந்து காலநிலை கல்விக்கான விழிப்புணர்வுக்காக கணக்கெடுப்பு மேற்கொண்டனர். இந்த ஆய்வு 18 - 22 வயதுள்ளவர்களிடம் கேள்வி - பதில், குழு விவாதம் ஆகியவை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய பகுதிகளில் நடந்த இந்த ஆய்வில், பங்கேற்ற முதல் முறை வாக்காளர்களில் 52.2% பேர், காலநிலை மாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு கட்சியோ அல்லது அரசியல்வாதிக்கோ தான் வாக்களிப்போம் எனவும், 55% பேர் காலநிலை நெருக்கடியை சாளிக்கும் மிகச் சிறந்த வழி, காலநிலை கல்வி மற்றும் விழிப்புணர்வு மட்டுமே எனவும் கூறியுள்ளனர்.

'இக்கணக்கெடுப்பின் முடிவில், இளைஞர்கள் காலநிலை மாற்றம் குறித்த அதிக விழிப்புணர்வை பெறுவதையும், அதில் அக்கறைக் கொண்டிருப்பதை அரசியல் கட்சிகளுக்கு காட்டுவதையும் வெளிப்படுத்துவதாகவும்; இதற்கு தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் செவிசாய்க்க வேண்டும்' என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில், 84% பேர் இவற்றை தங்களது அன்றாட நடவடிக்கையோடு தொடர்புபடுத்தியதும், காலநிலை - சுற்றுச்சூழல் குறித்து வார்த்தைகளை ஒன்றுக்கொன்று மாற்றியமைத்து மரம் நடுதல், நெகிழியை தவிர்த்தல் எனக் கூறியதையும் காண முடிந்தது.

  • இறுதியில், காலநிலை - சுற்றுச்சூழல் குறித்து போதுமானதாக அறிந்துள்ளதாக - 73% பேரும்,
  • காலநிலை நெருக்கடிக்கு அரசாங்கமே காரணம் என்றும் 25% பேரும்,
  • தனிநபர்கள் காரணம் என - 52% பேரும்,
  • தொழிற்சாலைகள் காரணம் என - 15% பேரும்,
  • காலநிலை நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பயனுள்ள வழிகளாக காலநிலை கல்வி மற்றும் விழிப்புணர்வு தேவை என- 55% பேரும்,
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி என - 50% பேரும்,
  • காலநிலை நெருக்கடி தொடர்பாக அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக - 62% பேரும் பதிலளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அரசியல் கட்சி அல்லது அரசியல்வாதி உள்ளிட்டோரை மட்டும் இந்த காலநிலை - சுற்றுச்சூழல் கல்வியோடு முழுமையாக தொடர்புபடுத்திவிட்டு, இயற்கையை சார்ந்துள்ள நாம் அனைவருக்கும் இவற்றை குறித்து அறிந்து கொள்வதிலும், பாதுகாப்பதிலும் இன்றியமையாத பெரும்பங்கு உள்ளதை மறக்கிறோமோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

முதல் முறை வாக்காளர்கள், அதனை சுற்றுச்சூழல் படிப்புக்கும் - காலநிலை கல்விக்கும் இடையேயான வேறுபாட்டை அறிந்திருக்கவில்லை என்பதையும் இக்கணக்கெடுப்பின் மூலம் தெரியவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.