ETV Bharat / opinion

ரஷ்யா - உக்ரைன் போர் - இந்தியா வெறும் பார்வையாளர் தானா? - Russia Ukraine war - RUSSIA UKRAINE WAR

RUSSIA UKRAINE WAR: ரஷ்யா உக்ரைன் போர் புதிய பரிமாணத்தை அடைந்து வரும் நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? உலக நாடுகளின் அரசியல் இந்தியாவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விளக்குகிறார் முனைவர் விவேக் மிஸ்ரா.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - AP Photo)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 6:12 PM IST

ஹைதராபாத்: ஐரோப்பா எல்லையில் நடைபெற்று வரும் ரஷ்ய- உக்ரைன் போர் ஆசியாவின் வெகுதூரத்தில் நடப்பதைப் போன்று தோன்றினாலும், இந்த போர் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைனின் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான கார்கிவ், அல்பெய்ட் போன்றவற்றை ரஷ்யா நெருங்கி வருகிறது.

யுத்த களத்தில் நிகழ்ந்து வரும் இந்த முன்னேற்றங்கள் சீராக இருப்பதாலும், இது உக்ரைனின் கிழக்கில் ரஷ்யா மேலும் முன்னேற அனுமதிப்பதால், எல்லைகள் மாறுகின்றன. மற்றொரு விதத்தில் பார்த்தோமானால், உக்ரைனுக்கு மேற்குலக நாடுகளின் ஆயுத விநியோகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுமார் 60 பில்லியன் டாலர் அளவுக்கு தளவாட நிதி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த ஏப்ரலில் ஒப்புதல் வழங்கியது. கண்ணுக்கெட்டிய தொலைவில் யுத்தம் முடிவதற்கான அறிகுறியே இல்லாத நிலையில், போரின் பரிணாமங்களை உற்று நோக்கும் உலகநாடுகள் தங்கள் நலனை நிலை நிறுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துகின்றன.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் (GFX - ETV Bharat)

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியது முதலே இந்தியாவின் மீதான உலகளாவிய எதிர்பார்ப்புகள் எகிறத்துவங்கின. ரஷ்யா, உக்ரைன் என இரு நாடுகளிடமுமே நல்ல நட்பு பாராட்டும் நாடு என்ற முறையில், மத்யஸ்தம் செய்வதற்கு வாய்ப்புள் நாடாக அனைவராலும் இந்தியா பார்க்கப்பட்டது. போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த எதிர்பார்ப்பு பரவலாகி வருகிறது. முக்கியமாக உக்ரைனில் ஜூன் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையிலும் இந்தியாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. (இந்த கட்டுரை வெளியாகும் ஜூன் ஆகிய இன்று இந்த அமைதிப்பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இதில் ரஷ்யாவின் கருத்தைக் கேட்காமல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது.)

ஆனால் பூகோள ரீதியாக உலகின் ஏதோ ஒரு மூலையில் நடைபெறும் போர் இந்தியாவில் முக்கியத்துவம் பெறுவது ஏன்? இந்தியாவும் ரஷ்யாவும் 70 ஆண்டுக்கு மேலாக தொடரும் நட்பைக் கொண்டுள்ளன. பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதி முதல், உத்திசார் கூட்டாண்மை வரை இருநாடுகளிடையே ஆழமான நட்பு உள்ளது. பாதுகாப்பு உபகரணங்களுக்காக ரஷ்யாவை இந்தியா பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால், சர்வதேச பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு இந்த காரணம் போதுமானதா?

இருநாட்டு உறவின் நுணுக்கங்களை பாதுகாப்பு காரணங்கள் அல்லது கடந்த கால வரலாற்றின் வழியே பார்ப்பது எளிதானது. முதலாவதாக பனிப்போர் கால கட்டத்திலேயே இருதரப்பு உறவு குறிப்பிடத் தகுந்த அளவில் வலுப்பெறுகிறது. இரண்டாவது இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் பூகோள முக்கியத்துவமும் தொடர்ந்து மாறுதலுக்குள்ளாகி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு முன்னதாகவே இந்தியா இருநாடுகளுடனும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. போரின் காரணமாக இரு நாடுகளிலிருந்தும் ஏற்றுமதி குறைவதால் இந்தியாவின் எரிபொருள் தேவை மற்றும் உணவுப்ப் பொருள் சப்ளையிலும சிக்கல் எழுகிறது. இதனை ஏற்றுக் கொண்டு மற்ற நாடுகளைப் போன்று இந்தியாவும் தயாராகி வேறு உத்திகளை வகுக்க வேண்டும்.

எந்த வடிவிலான போர்களுக்கும் எதிரான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்திருக்கிறது. போரில் ஈடுபடும் இருநாடுகளில் ஒன்றினை ஆதரிப்பதைக் காட்டிலும், தனது நலனையே முன்வைக்கிறது இந்தியா என விவரிக்கலாம். ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியாவின் மதிப்பீடு சில பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டது.

வியூக வகுப்பில் தன்னாட்சி நிலை: உலக அரங்கில் அதிகாரப் பரவல் மறு கட்டமைப்பை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யா- உக்ரைன் பிரச்சனைகளுக்கு நடுவிலும் எந்த பக்கமும் சாராமல் இந்தியா நடுநிலை வகிக்கிறது. இந்த அணுகுமுறை பல்வேறு காரணிகளைச் சார்ந்துள்ளது. முதலாவதாக இந்தியாவின் வரலாற்று காரணங்கள் உள்ளன. ஐரோப்பிய கண்டத்தில் நாடுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளில் இந்தியா ஒரு போதும் நேரடியாக தலையிட்டதில்லை.

ஆசிய பிரச்சனைகளில் ஐரோப்பிய நாடுகள் தலையீட்டை விரும்பாதது போன்றே, இந்தியாவும் ஐரோப்பிய பிரச்சனைகளில் தலையிடுவதில்லை. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது நடைபெற்று வரும் போர் கூட ஐரோப்பிய கண்டத்தின் வரலாறு தொடர்புடையது, இதில் இந்தியாவின் பங்களிப்பு எந்த விதத்திலும் இல்லை. வியூக நிலைப்பாடுகளில் தன்னிச்சையாக இந்தியா நடந்து கொள்வதில் மேலும் சில பல காரணங்களும் உள்ளன. முதலாவதாக ஏதேனும் ஒரு நாட்டை ஆதரிப்பது பல்வேறு சிக்கலான பிரச்சனைகளுக்கு இந்தியாவை கொண்டு சேர்க்கும். தூதரக உறவுகளில் நெகிழ்வுத்தன்மை, நடுநிலையில் உறுதி போன்ற இந்தியாவின் சர்வதேச உறவுக் கேடயங்களை இது பாதிப்பதாக அமையும்.

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையைப் பொறுத்தவரையிலும் இது ஒரு அதிகாரப் போட்டி எனலாம். உலக நாடுகள் இரு பிரிவாக பிரிந்து மோதிக் கொள்ளும் தோற்றத்தைத் தருகிறது. ரஷ்யா ஒரு புறமிருக்க மேற்குலக நாடுகளின் ஆதரவோடு உக்ரைன் மறுபுறம் இருக்கிறது. இது உலகஅளவிலான ஒரு ஒழுங்கை பாதிக்கிறது. பூகோள அரசியல் சுழல்களில் சிக்காமல் பயணிப்பதே இந்தியாவின் விருப்பம். உலக ஒழுங்கை (World Order) பேணுவது என்பது ஏதேனும் ஒரு நாட்டை ஆதரிப்பதால் அமைந்துவிடாது. இதில் பல்வேறு தரப்பினருடனும் சுமூகமான உறவைப் பேண வேண்டும்.

பூகோள ரீதியாக ரஷ்யா - உக்ரைன் போர் என்பது அதிகாரத்திற்கானது, இது வடிவமைப்பு ரீதியாக உலக நாடுகளை இரண்டு கொத்துக்களாக பிரித்துவிடும். உக்ரைன் - ரஷ்யப் போரின் பின் விளைவுகள் என்பவை தவிர்க்க முடியாதவை. உலகை இரண்டாகப் பிரிப்பதில்தான் இது போய் முடியும். இதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே தெரிகின்றன. ரஷ்யா, சீனா, ஈரான், சிரியா, வடகொரியா நாடுகள் ஒருபுறமென்றால், மேற்குலக நாடுகள் மறுபுறம் அணிவகுக்கின்றன. இதே நேரத்தில் அணி சேராமல் நடுநிலை வகிக்கும் நாடுகளுக்கென்றும் ஒரு இடம் இருக்கிறது. சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையிலும மதிப்பீடுகள் விருப்பம் போன்றவற்றிற்கிடையிலான சமன்பாடு, முன்தயாரிப்பின்றி ஒரு தரப்பை ஆதரிக்கும் போது கெடுகிறது.

உலக ஒழுங்கு என்பது மாறிக் கொண்டு வரும் நிலையில் உள்ளது. பல்முனை துருவங்கள் என்பதிலிருந்து பல்முனை அணிகளாக மாறி வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போர், ஹமாஸ் - இஸ்ரேல் பிரச்சனை போன்றவை இந்த இயல்பான மாறுபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதன் மூலம் அதிகாரப்பரவலை குறைத்து, அதிகாரக்குவிப்பே அதிகரிக்கிறது. வேறு நாட்டுடன் பொருளாதார உறவைக் கொண்டிருந்தாலும், நாடுகள் வேறு வழியின்றி விருப்பமற்ற அணியில் சேர வேண்டியதாக உள்ளது. உதாரணத்திற்கு சீனா, இந்த நாடு ரஷ்யாவுடன் உறுதியான உறவைக் கொண்டுள்ளது. ஆனால் மேற்குலகநாடுகளுடன் வலிமையான பொருளாதார உறவைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் எரிசக்தி மற்றும் பாதுகாப்பு தேவைகள்: இந்தியாவுக்கான மிகப்பெரிய பாதுகாப்பு தளவாட விநியோகஸ்தராக ரஷ்யா இருப்பதால், அந்நாட்டுடனான உறவு ஆழமான யுக்தி சார்ந்த முக்கியத்துவம் பெறுகிறது. பிப்ரவரி 2022 முதல் இந்தியாவின் ரஷ்யாவுடனான எண்ணெய் வள உறவு புதிய சிக்கலான பரிணாமத்தை அடைந்தது, சப்ளை கிடைப்பது மட்டும் காரணமல்ல, விலை மாறுபாடும் கூட இதற்கு காரணமாகும். எரிசக்தி தேவைக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா ரஷ்யாவிலிருந்து கணிசமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவில் எண்ணெய் விலையில் இருக்கும் நிலையான தன்மை, இந்தியா போன்ற நாடுகளுக்கு ரஷ்யாவை நாடுவதற்கான கூடுதல் காரணத்தைக் கொடுக்கிறது.

ரஷ்யா - உக்ரைன் போரைப் பற்றி ஏராளமான கணிப்புகள் இருக்கலாம். ஆனால் இவற்றில் எதுவுமே இந்தியாவின் தேர்வை பாதிக்கக் கூடாது. போரின் முடிவும் கூட இந்தியாவின் நிலைப்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. அப்படியானால், மற்ற அனைத்தையும் காட்டிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை தாக்கமின்றி காப்பது எது? பொருளாதார தடைகள் கட்டுப்பாடு, கண்காணிப்புகளைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவுடன் இந்தியா இணக்கமாக இயங்க வேண்டும். இரண்டாவது சீனா - ரஷ்யா உறவுகள் நன்றாக இருந்தாலும் ரஷ்யாவுடனான உறவில் சீனா என்ற காரணி தவிர்க்க முடியாததாக உள்ளது.. பெரிய நாடகத்தனமான மாற்றம் நிகழ்ந்து மேற்குலக நாடுகளுடனான உறவை சீனா சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: இந்திய செமிகண்டக்டர் துறையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்! உலகின் சிப் மேக்கராக மாறுமா இந்தியா? நிபுணர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.