ETV Bharat / opinion

குறைந்த அளவிலான காற்று மாசுவை சுவாசித்தாலும் மாரடைப்புக்கு வழிவகுக்குமா? நிபுணர் கூறுவது என்ன? - Air pollution cause of hear attack - AIR POLLUTION CAUSE OF HEAR ATTACK

Air Pollution: தொடர்ச்சியான காற்று மாசுவை உட்கொள்வதன் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இருதயம் சார்ந்த ஆபத்துகளை அதிகரிக்க வழிவகை செய்கிறது. காற்றின் தரக் குறியீடு மூலம் காற்று மாசு அடிப்படை அபாயங்களை தெரிந்து கொள்ள முடியுமா, காற்றின் தரக் குறியீடு குறித்து பிரிட்டன் மெடிக்கல் ஜர்னல் வெளியிட்ட தகவல் என்பது குறித்து தவுபிக் ரசீத் விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 1:38 PM IST

ஐதராபாத் : தொடர்ந்து மாசு அடைந்த காற்றை சுவாசித்து வருபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவில் காற்றின் தரநிலை குறியீடு என்பது பல்வேறு நகரங்களில் குறிப்பிட்ட அளவை காட்டிலும் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. இது பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், காற்று மாசுபாட்டு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய் வகையில் இல்லை என்றும் மக்கள் பீதிக்குள்ளாக வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அண்மையில் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியான ஆய்வு அறிக்கையில், அதிகளவிலான காற்று மாசுவை காட்டிலும், குறைந்த அல்லது அடர்த்தியான அளவு கொண்ட காற்று மாசுபாட்டினால் ஏற்படும் ரத்த நாள சேதங்கள் மிக மோசமானது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தொடர்ந்து மாசு அடைந்த காற்றை சுவாசிக்கும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவிலான காற்று மாசுபாடு மற்றும் அடர்த்தி அதிகமான காற்று மாசு ரத்த நாளங்களை சேதப்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மூத்த இருதய நோய் நிபுணரும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

பிரிட்டன் ஜர்னல் ஆய்வறிக்கை கூறுவது என்ன?: பிரிட்டன் மெடிக்கல் ஜர்னலில் வெளியான ஆய்வு அறிக்கையின் படி தொடர் காற்று மாசு இருதயம் சார்ந்த சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த சில நாட்களுக்கு மட்டும் கடுமையான காற்று மாசுவை உட்கொண்டோமா அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தொடர்ச்சியாக காற்று மாசு உட்கொள்ளப்பட்டதா என்பது முக்கியமல்ல.

காற்றின் தரத்திற்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை கடைபிடித்தால் மட்டுமே காற்று மாசுவால் ஏற்படும் விளைவுகளை தவிர்த்து பலன்களை அடைய முடியும்.

நீண்ட கால மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கக் கூடிய இருதயம் சார்ந்த நோய் தாக்குதல் மற்றும் பிரச்சினைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காற்றில் குறிப்பிட்ட நுண்துகள்கள் (particulate matter) 2 புள்ளி 5 மைக்ரோ மீட்டருக்கும் குறைந்த அளவில் இருக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

இந்த குறிப்பிட்ட நுண்துகள்கள் உரிய அளவை காட்டிலும் அதிகரிக்கும் பட்சத்தில் இருதய நோய்கள் சார்ந்த அபாயங்களை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட நுண்துகள்கள் 2 புள்ளி 5 மைக்ரோ மீட்டர் அளவை தாண்டி உயரும் பட்சத்தில் சீரற்ற இருதய இயங்குதன்மை, இதய செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் Cardiac arrhythmia என்பது சீரற்ற இருதய இயங்குதன்மை குறிப்பிட்ட அளவை காட்டிலும் அதிகளவிலான இதய துடிப்பு ஆகும். உலக சுகாதார அமைப்பின் தரநிலையின் படி காற்றின் தரம் என்பது ≤5 µg/m3 என்ற அளவில் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

காற்று மாசுவை கட்டுப்படுத்த எளிதான வழி: மூத்த இருதய நோய் நிபுணரும் இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் நிறுவனருமான டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி கூறுகையில், காற்றின் தரநிலை குறியீடு 100 முதல் 150 என்ற அளவில் இருந்தால் எந்தவித ஆபத்தும் இல்லை. கடந்த சில நாட்களாக காற்றின் தரக் குறியீடு அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

உண்மையில் காற்று தரக் குறியீடு 400 பிளஸ் என்ற அளவை தாண்டும் பட்சத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அதேநேரம் 100 முதல் 150 வரை இருக்கும் பட்சத்தில் பாதுகாப்பானது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளன. காற்று மாசுபாட்டின் குறைந்த அளவிலான உமிழ்வு என்பது கூட ஒருவித அழற்சியை தூண்டும் வகையில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகளவிலான காற்று மாசுபாட்டின் காரணமாக இதய நாளங்கள் மற்றும் இதயத்திற்கு சேதத்தை அதிகரிக்கிறது. ஆனால் காற்று மாசின் ஒட்டுமொத்த காலமும் முக்கியமானது, ஒரு வருடத்தில் ஆறு அல்லது எட்டு மாதங்களுக்கு மிதமான அல்லது ஒப்பீடும் அளவில் குறைந்த அளவிலான காற்று மாசு இருந்தால், அது இரத்த நாளங்களில் நிலையான எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு 600 அல்லது 700 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்தால் நிலையற்ற மற்றும் கடுமையான பாதிப்பு ஏற்படக் கூடிய மாரடைப்பு ஆபத்தை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் நிலையான சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, உயர் ரத்த அழுத்தம் 140/90 ஆல் வரையறுக்கப்படுகிறது, அதேநேரம் 130/85 என்பது ஆபத்தை ஏற்படுத்தாது என்று அர்த்தமல்ல.

அதேநேரம் நீரிழவு அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிதமான அளவிலான காற்று மாசுபாடு கூட அதிக பாதிப்பை ஏற்படுத்தும். சீரான ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதை தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கைகளை கையாள வேண்டும்" என்று டாக்டர் ஸ்ரீநாத் ரெட்டி தெரிவித்து உள்ளார்.

டாக்டர் ரெட்டியின் பரிந்துரைகள் :

1. ஒரு பொதுவான கொள்கை மற்றும் பொது அமைப்புகளின் பதில் இருக்க வேண்டும், அங்கு நாம் அனைவருக்கும் வெளிப்படும் அளவைக் குறைக்க வேண்டும்.

2. மாசுபட்ட காற்றை கட்டுப்படுத்துவதில் தனிநபரின் பங்கும் உள்ளது.

3. வானிலை சற்று தெளிவாக இருக்கும் போது, காற்று புகை இல்லாத போது மட்டும் வெளியே செல்லவும்.

4. வெளியே செல்லும் போது முகக்கவசம் பயன்படுத்தவும்.

5. அதிக மாசு நிறைந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க முயற்சிக்கவும். நுண்துகள்கள் மேகங்களோடு கலக்காத நன்கு காற்றோட்டமான இடங்களுக்கு செல்வது நல்லது. ஏனெனில் நன்கு காற்றோட்டமான இடங்களில் காற்றின் தூயத் தன்மை என்பது நன்றாக இருக்கும்.

இதையும் படிங்க : "கார்பன் உமிழ்வு இல்லா இந்தியா" 2047க்குள் 100% மின்சார சரக்கு வாகனங்கள் சாத்தியமா? நிபுணர் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.