துணிகளில் படிந்துள்ள விடாப்படியான கறைகளை சில டிப்ஸ்கள் மூலம் எளிதில் அகற்றலாம் என நிபுணர்கள் கூறுவதை நம்ப முடிகிறதா? அந்த குறிப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்..
மாதவிடாய் இரத்த கறையை அகற்ற?: தற்செயலாக அடிபடும் போது ஆடையில் லேசான இரத்த கறை ஏற்பட்டாலே, அதை அகற்றுவது எளிதான விஷயம் கிடையாது. குறிப்பாக பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் இரத்த கறைகள் பொதுவானவை. இவற்றை போக்க,ஹைட்ரஜன் பெராக்சைடு நன்றாக வேலை செய்கிறது. இரத்தக் கறையின் மீது ஹைட்ரஜன் பெராக்சைடை ஊறவைத்த பின் சோப்பு தேய்த்து கழுவினால் கறை நீங்குகிறது.
இரும்புத் துரு: சில நேரங்களில் நமது துணிகளில் இரும்புத் துரு கறை படிகிறது. இது போன்ற சூழ்நிலையில், அரை வாளி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உலர் உப்பு சேர்த்து, துணிகளை ஊறவைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் கறைகள் மீது எலுமிச்சை சாறு சேர்த்து சோப்பு போட்டு நன்றாக கழுவினால் கறை மறைந்துவிடும். ஹைட்ரஜன் பெராக்சைடு துரு கறைகளை அகற்றவும் நன்றாக வேலை செய்கிறது.
Ketchup கறை: சாப்பிடும் போது பலவிதமான உணவுப் பொருட்கள் உடைகள் மீது தவறுதலாக விழுகின்றன. சில நேரங்களில் இந்த கறைகள் முற்றிலுமாக மறையாமல் இருக்கும். அப்படி, உடையில் கெட்ச்அப்கறை படிந்தால், கறை படிந்த இடத்தில் பிரஷ் மூலம் தேய்த்தால், உடனடியாக கறை நீங்கிவிடும் என்கிறார்கள். சாக்லேட் கறைகள் இருந்தால், பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் துணியை ஊறவைத்து, பின்னர் சோப்பு கொண்டு கழுவினால் போதும் என்கின்றனர்.
லிப்ஸ்டிக் கறை: ஆடைகளில் உதட்டுச்சாயம் படிந்தால் கிளிசரின் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும் என்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் கறை எளிதில் நீங்குகிறது. அதுமட்டுமல்லாமல், எலுமிச்சம்பழத்தை கறையின் மீது தேய்ப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.
Ink கறைகளை அகற்றுவது எப்படி?: மாணவர்கள் ஆடைகளில் மை கறை படிவது இயல்பானவை தான். இந்த கறையை அகற்ற டவலால் கறையை தேய்த்து, பின் ஹேர் ஸ்ப்ரேயை தூவி சிறிது நேரம் கழித்து கழுவினால் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஊறுகாயிற்கு வினிகர் போதும்: ஊறுகாய் கறைகள் துணிகளில் ஏற்பட்டால், துணியை வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றில் சிறிது நேரம் ஊறவைத்து, பின்னர் சோப்பு கொண்டு சுத்தம் செய்தால் போதும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
- பாத்ரூம் குழாய்கள் மீதுள்ள கறைகள் போகவே மாட்டேங்குதா?..டூத் பேஸ்ட் போதுமே இத சரிபண்ண!
- டிராவலில் வாந்தி வராமல் இருக்க என்ன செய்யலாம்?..சூப்பர் டிப்ஸ் இதோ..!
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்