சமைத்த சாதம் மீதமாவதும், அதை கீழே தூக்கி வீசுவதும், பெரும்பாலானோர் வீடுகளில் தினசரி நடக்கும் ஒரு நடைமுறையாக தான் இருக்கிறது. இதே தான் உங்கள் வீட்டிலும் நடக்கிறதா? மீதமான சாதத்தை வைத்து என்ன செய்வது என உங்களுக்கு தெரியவில்லையா? தூக்கி வீசுவது தான் ஒரே வழியா? கவலைய விடுங்க..மீதமான சாதத்தில் சுவையாக மற்றும் மொறு மொறு என இருக்கும் வடையை ஒரு முறை செய்து பாருங்க..
தேவையான பொருட்கள்:
- சாதம் - 1 1/2 கப்
- தண்ணீர் - 1/4 டம்ளர்
- பெரிய வெங்காய்ம் - 1
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - 1 சின்ன துண்டு
- அரிசி மாவு - 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
மொறு மொறு வடை செய்வது எப்படி:
- ஒரு மிக்ஸி ஜாரில் சாதம் மற்றும் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். பின்னர், இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- அதனுடன், நறுக்கி வைத்துள்ள இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- இந்த கலவையை பிசையும் போது, அதிக ஈரப்பதமாக இருந்தால் கூடுதலாக அரிசி மாவு சேர்த்து வடை போடும் பதத்திற்கு பிசையவும்.
- இதற்கிடையில், அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர், கையில் எண்ணெய் தடவி, கொஞ்சமாக மாவு எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து ஓட்டையிட்டு எண்ணெயில் கவனமாக போடவும்.
- ஒரு புறம் பொன்னிறமாக சிவந்து வந்ததும், மறுபுறம் திருப்பிவிட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து இறக்கினால் சூப்பரான மொறு மொறு உளுந்து வடை தயார்.
டிப்ஸ்:
- வடையை பொரிக்கும் போது, அடுப்பு மீடியம் முதல் ஹைய் பிளேமில் இருக்க வேண்டும். கம்மியான தீயில் இருந்தால் வடை அதிக எண்ணெய் உறிய ஆரம்பிக்கும்.
- எண்ணெய் அளவிற்கு ஏற்ப 4 முதல் 5 வடைகளை ஒரே சட்டியில் பொரித்து எடுக்கலாம்.
இதையும் படிங்க:
- ரோட்டுக்கடை ஸ்டைல் கார சட்னி இப்படி செய்ங்க..2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவீங்க!
- புரோட்டீன் ரிச் பச்சைப்பயறு தோசை எப்படி செய்வது? இவ்வளவு நன்மைகள் இருக்கும்னு தெரியாம பேச்சே!
- பால் திரியாமல் 'கருப்பட்டி டீ' போடுவது எப்படி? சிம்பிளான 4 ஸ்டெப் இதோ!
- இனி டீ போட்டா ஒரு முறை இப்படி போடுங்க..டீ கடை டீ ரகசியம் இதான்!