ETV Bharat / lifestyle

பயிர்களை முளை கட்ட 6 எளிய முறைகள்..டக்குனு படிச்சு சட்டுனு பண்ணிப்பாருங்க!

பயிர்களை முளை கட்டுவது கடினமாக இருக்கிறதா? வேறு வழிகள் ஏதேனும் உண்டா? உங்களுக்காக, 6 எளிய முறைகளை கொண்டு வந்திருக்கிறோம்..தெரிந்து கொள்ளுங்கள்..!

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits- Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : 3 hours ago

பயிர்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும், முளை கட்டிய பயிர்களை சாப்பிட்டால் பலன் இரு மடங்கு என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால், இங்கு பிரச்சனை என்ன வென்றால், பலருக்கும் பயிர்களை எப்படி முளை கட்டுவது என தெரியவில்லை. அதனால், இப்போது பயிர்களை எளிமையான வழியில் எப்படி முளை கட்டுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..

எந்த பயிர்களை முளை கட்டுவதாக இருந்தாலும், ஒரு நாள் முன்னதாகவே அதனை ஊற வைப்பது அவசியம். உதாரணத்திற்கு, இன்று நீங்கள் பயிர்களை முளை கட்டுவதாக இருந்தால், நேற்று படுக்கைக்கு செல்லும் முன் ஒரு கிண்ணத்தில் பயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து வைத்து விடுங்கள்.

முறை 1: உதாரணத்திற்கு நீங்கள் காரமணி அல்லது தட்டப்பயிரை ஊறவைத்திருந்தால், அந்த தண்ணீரை நன்றாக வடித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர், ஒரு ஹாட் பாக்சில் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து அதனுடன் நாம் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள காரமணியை சேர்த்து விடுங்கள்.

பின்னர், 1 நிமிடத்திற்கு பின்னர், ஹாட்பாக்சில் இருந்த வெதுவெதுப்பான நீரை கீழே ஊற்றிவிட்டு ஹாட் பாக்ஸை மூடி வைத்து அடுத்த நாள் காலை திறந்து பார்த்தால், பயிர் நன்றாக முளை விட்டிருக்கும். இந்த முறை, குளிர் பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு சிறந்தது.

முறை 2: நீங்கள் வேர்கடலையை ஊற வைத்து எடுத்து வைத்திருந்தால், ஒரு ஈரமான வெள்ளை துணியில் இந்த கடலையை சேர்த்து கட்டி ஒர் தட்டு அல்லது பாத்திரத்தில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை திறந்து பார்த்தால் சத்தான முளை கட்டிய பயிர் கிடைத்துவிடும்.

முறை 3: ஒரு பாத்திரம் மீது வடிக்கட்டியை வைத்து அதில், நீங்கள் ஊற வைத்திருந்த பச்சை பயிரை சேர்த்து வெள்ளை துணியால் மூடிவிடுங்கள். பின்னர், வெள்ளை துணியில் அவ்வப்போது தண்ணீர் தெளித்து வந்தால் பயிர் வேகமாக முளை விடும்.

முறை 4: நீங்கள், கொள்ளு பயிரை ஊற வைத்திருந்தால், அதனை நன்றாக வடிக்கட்டிய பின்னர் ஒரு டிபன் பாக்ஸில் போட்டு முழுமையாக மூடாமல், காற்று புகும் அளவிற்கு இடவெளி விட்டு மூடி வைத்து விடுங்கள். காலையில் முளை கட்டிய பயிர் ரெடியாகிவிடும்.

முறை 5: ஒரு மண்சட்டியில், நீங்கள் ஊறவைத்து எடுத்து வைத்துள்ள சுண்டலை சேர்த்து நன்றாக பரப்பி விட்டதும், வீட்டில் உள்ள வடித்தட்டை வைத்து முடி வைத்து விடுங்கள். முளை கட்டுவதற்காக நாம் வைத்துள்ள பயிர்களை சூரிய ஒளி வெளிச்சம் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்.

முறை 6: இந்த முறைகள் அனைத்தும் கடினமாக இருக்கிறது என்றால், ஒரு டிபன் பாக்ஸில் ஊற வைத்த பயிரை சேர்த்து மூடி பிரிட்ஜில் வைத்து விடுங்கள். காலை முளைத்து வந்துவிடும்.

டிப்ஸ்:

  1. வீட்டில் அதிகமானோர் இருந்தால், பாத்திரம் அல்லது துணியில் முளை கட்டுவதற்கு பதிலாக, ஒரு சல்லடையில் பயிரை சேர்த்து மேல் ஒரு வெள்ளை துணியால் மூடி வைத்து விட்டால் பயிர் நன்றாக முளைவிட்டு வரும். ஒரே சல்லடையில் அனைத்து பயிர்களையும் அல்லது தனியாகவும் செய்யலாம்.
  2. இட்லி தட்டு, காய்கறி வடிகட்டி போன்றவற்றையும் பயிர் முளை கட்டுவதற்கு பயன்படுத்தலாம்.
  3. எந்த பயிர்களை வேண்டுமானாலும், மேலே கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பயன்படுத்தி முளை கட்டலாம்.
  4. பச்சை பயிறு, கொள்ளு ஆகியவை முளை விடுவதற்கு நீண்ட நேரம் எடுக்காது. அதுவே, சுண்டல் வேர்க்கடலை போன்ற பயிர்கள் முளை கட்டுவதற்கு 24 மணி நேரத்தில் மேல் எடுக்கும்.
  5. முளை கட்டிய பயிர்களை அதிகப்பட்சமாக 3 நாட்களுக்கு மேல் உபயோகப்படுத்தக்கூடாது.

இதையும் படிங்க:

வீட்டில் கறிவேப்பிலை செடி தளதள வென்று வளரணுமா? 'இந்த' இரண்டையும் வாரத்திற்கு ஒரு முறை தெளிங்க!

மட்டன் பஞ்சு மாதிரி வேக வேண்டுமா? அட்டகாசமான 8 டிப்ஸை ஃபாலோ பண்ணிப்பாருங்க!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETVBharat TamilNadu)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.