ETV Bharat / lifestyle

நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!

நெயில் பாலிஷ் ரிமூவர் தீர்ந்துவிட்டதா? ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றும் சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

author img

By ETV Bharat Lifestyle Team

Published : 3 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

கைகளை அழகாக காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது விரல்கள் தான். நகம் சுத்தமாக இருந்தால் கைகளும் கூடுதல் அழகை பெறுகிறது. குறிப்பாக, பெண்கள் தங்களது உடை மற்றும் மனநிலைகளுக்கு ஏற்ப நகங்களில் நெயில் பாலிஷை போடுவார்கள். ஆனால், சில நேரங்களில் நெயில் பாலிஷை அகற்ற பயன்படுத்தப்படும் ரிமூவர் இல்லாமல் முழிக்கும் சூழ்நிலைகளும் ஏற்படுகின்றது.

இந்த மாதிரியான சூழ்நிலைகளில், வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

ஹேன்ட் சானிடைஷர் : நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற ஹேன்ட் சானிடைஷர் பயன்படுத்தலாம். சிறிய துண்டு பஞ்சில் ஹேன்ட் சானிடைஷரை ஊற்றி நகங்களை துடைத்தால் நெயில் பாலிஷ் எளிதில் நீங்கிவிடும்.

வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு: நெயில் பாலிஷை அகற்ற வினிகர் மற்றும் எலுமிச்சை உதவியாக இருக்கிறது. இதற்கு, ஒரு கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதனுடன் நான்கு சொட்டு வினிகர் சேர்த்து நகங்களில் தடவவும். 5 நிமிடங்களுக்கு பின்னர் காட்டனால் துடைத்தால் நெயில் பாலிஷை எளிதாக அகற்றி விடலாம்.

ஹைட்ரஜன் பெராக்சைடு: நகங்களில் உள்ள கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு உதவுவது போல நெயில் பாலிஷையும் அகற்றுகிறது. இதற்கு, சூடான நீரில் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும். இந்த நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நகங்கள் நனையும் படி வைக்க வேண்டும். பின்னர் நெயில் கட்டரில் உள்ள நெயில் ஃபைலர் உதவியுடன் நெயில் பாலிஷை எளிதாக அகற்றி விடலாம்.

இதையும் படிங்க: துணிகளில் விடாப்படியான கறையா? இப்படி அலசினால் நிமிடங்களில் காணாமல் போகும்!

டூத் பேஸ்ட்: நெயில் பாலிஷை நீக்க டூத் பேஸ்ட்டை பயன்படுத்தலாம். இதற்கு, முதலில் டூத் பேஸ்டுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து பிரஷின் உதவியுடன் உங்கள் நகங்களின் மேல் மென்மையாகத் தேய்க்கவும். இதை அப்படியே 5 நிமிடங்களுக்கு காய வைத்து கழுவினால் நெயில் பாலிஷ் நீங்கிவிடும். டூத் பேஸ்டில் உள்ள எத்தில் அசிடேட் என்ற வேதிப்பொருள் நெயில் பாலிஷை நீக்கும் தன்மை கொண்டது.

டியோடரன்ட் : சிறதளவு சியோடரன்ட்டை பஞ்சில் நனைத்து நகங்களில் தேய்த்தால் நெயில் பாலிஷின் நிறம் மறைய தொடங்கும். மற்றவைகளை போல டியோடரன்ட் கச்சிதமாக நெயில் பாலிஷை நீக்க முடியாவிட்டாலும், நிறத்தை மங்கச் செய்வதில் உதவியாக இருக்கிறது.

பெர்ஃப்யூம்: நெயில் பாலிஷை அகற்ற பெர்ஃப்யூம் உதவியாக இருக்கிறது. சிறுது பெர்ஃப்யூமை காட்டனின் தெளித்து நகங்களை துடைக்கவும். 3 முதல் 5 நிமிடங்களுக்கு இப்படி செய்வதால் நெயில் பாலிஷ் நீங்கி விடும். ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த முறையை தவிர்க்க வேண்டும்.

இதையும் படிங்க: உங்களுக்கு பாத வெடிப்பா? தேன், எலுமிச்சை இருந்தால் 2 வாரத்தில் மறைந்துவிடும்!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.