ETV Bharat / lifestyle

கல்யாண வீட்டு பிரிஞ்சி சாதம் சாப்பிட வேண்டுமா? டக்குனு இப்படி செய்து அசத்துங்கள்!

அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரிஞ்சி சாதத்தை கல்யாண வீட்டு ஸ்டைலில் உங்கள் வீட்டிலும் செய்ய வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றினால் சுவையான பிரிஞ்சி சாதம் தயார்..

author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 11, 2024, 5:13 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETVBharat)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடும் உணவுகளில் இந்த பிரிஞ்சி சாதமும் ஒன்று. அதிலும், கல்யாண வீட்டில் பரிமாறப்படும் பிரிஞ்சி சாதம் சுவைக்கு ஈடே இல்லை. இப்படியிருக்க, கல்யாண வீட்டில் சாப்பிட்டதை போல நம் வீட்டிலும் பிரிஞ்சி சாதத்தை எப்படி சமைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்...

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 500 கிராம்
  • தண்ணீர் - 750 மி.லி
  • தேங்காய் பால் - 500 மி.லி
  • நெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • பிரிஞ்சி இலை - 4
  • ஸ்டார் அன்னாசிப்பூ - 4
  • சோம்பு - 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 3
  • வெங்காயம் - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி - 2
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - அரை டீஸ்பூன்
  • சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
  • புதினா - 1 கொத்து
  • கொத்தமல்லி - 1 கொத்து
  • வறுத்த முந்திரி - 10
  • பொறித்த ப்ரட் - 4
  • கேரட், பீன்ஸ்,உருளைக்கிழங்கு - 1கப்

செய்முறை:

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் சேர்த்து பிரிஞ்சி இலையை போடவும்
  • அதன் பிறகு, ஸ்டார் அன்னாசிப்பூ, சோம்பு, இரண்டாய் வெட்டி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விடவும்.
  • இப்போது வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்குங்கள். அதில், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடுங்கள்.
  • அடுத்ததாக தக்காளியை சேர்த்து நன்கு வதக்கும் போது மஞ்சள் தூள்,மல்லித்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சோம்பு தூள் சேர்த்து ஒன்று சேரும் வரை வதக்கி விடுங்கள்
  • இப்போது இந்த கலவையில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து வதக்கி விடவும்
  • அடுத்ததாக, 15 நிமிடங்களுக்கு ஊற வைத்த அரிசியை சேர்த்து பொருமையாக அரிசி மசாலாவுடன் சேரும் வரை பிரட்டி விடுங்கள்.அடுத்ததாக கேரட், பீன்ஸ்,உருளைக்கிழங்கு சேர்த்து கலந்து விடுங்கள்.
  • இப்போது பிரிஞ்சிக்கு தேவையான உப்பு, தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி பொருமையாக கலந்து விடுங்கள்.
  • மசாலா,அரிசி, தேங்காய் பால் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும். இறுதியாக, கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து விட்டு 15-20 நிமிடங்களுக்கு மூடி போட்டு மிதமான தீயில் வேக விடுங்கள்.
  • 75 சதவீதம் தயரானதும் கடைசியாக முந்திரி, பிரட்,கொத்தமல்லியை சேர்த்து மூடி வைத்து பாத்திரத்தை இறக்கி விடுங்கள்.

தம் போடும் முறை: தோசைக்கல்லை அடுப்பில் வைத்து 10 நிமிடத்திற்கு பிரிஞ்சி பாத்திரத்தை அதன் மீது வைத்து விடுங்கள்..10 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் யெம்மியான பிரிஞ்சி சாதம் ரெடி..அப்புறம் என்ன செய்து அசத்துங்கள்..

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.