ETV Bharat / lifestyle

நாவில் வைத்தவுடன் கரையும் 'பேரிச்சம்பழம் அல்வா'..வீட்டில் உள்ள பொருட்கள் மட்டும் போதும்!

இந்த தீபாவளிக்கு வாயில் வைத்தவுடன் கரையும் பேரிச்சம்பழம் அல்வாவை எப்படி செய்வது என பார்க்கலாம்..

author img

By ETV Bharat Lifestyle Team

Published : 2 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

பொதுவாகவே பேரிச்சம்பழத்தில் சுவையை தாண்டி சத்துக்களும் கொட்டிக் கிடைக்கின்றது என்பதை அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட உணவு பொருளை வைத்து ஒரு அல்வா செய்தால் எப்படி இருக்கும்? சுவைக்கு சுவை, சத்துக்கு சத்து என வீட்டில் உள்ள பொருட்களை மட்டும் வைத்து செய்யக்கூடிய இந்த பேரிச்சம்பழம் அல்வாவை எப்படி செய்வது? எனப் பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

  • சர்க்கரை - 250 கிராம்
  • பேரிச்சம்பழம் - 500 கிராம்
  • பால் - இரண்டு கப்
  • நெய் - 3 தேக்கரண்டி
  • ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  • பாதாம், பிஸ்தா, முந்திரி - தேவையான அளவு

அல்வா செய்முறை:

  • அல்வா செய்வதற்கு முதலில், தரமுள்ள பேரிச்சம் பழங்களை எடுத்து அவற்றில் இருந்து கொட்டைகளை அகற்றவும். பின்னர், அவற்றை வெந்நீரில் போட்டு ஒரு மணி நேரம் தனியாக வைக்கவும்.
  • ஒரு மணி நேரத்திற்கு பிறகு, மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பேரிச்சம்பழத்தை போட்டு கூழ் போல் அரைத்து தனியாக வைக்கவும்.
  • இப்போது ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் சேர்க்கவும். நெய் உருகி சூடானதும் அரைத்து வைத்த பேரிச்சம் பழத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர், அடுப்பை குறைந்த தீயில் வைத்து சிறுது 5 நிமிடங்களுக்கி கிளறி விடவும். பிறகு சர்க்கரை மற்றும் பால் சேர்த்து மீண்டும் கரண்டியால் கைவிடாமல் கிளறி விடவும். கலந்து விடாமல் போனால், அல்வா கட்டிகளாக இருக்கும்.
  • சர்க்கரை நன்றாக கரைந்த பிறகு மொத்தமாக 20 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

இதையும் படிங்க: எப்போதும் போல அதிரசம், முறுக்குன்னு இல்லாம இந்த தீபாவளிக்கு சுவையான ரசமலாய் செய்து அசத்துங்கள்!

  • முதல் கால் மணி நேரத்திற்கு பின், கடாயில் ஒட்டாமல் அல்வா கெட்டியான பதத்திற்கு வரும்.
  • அந்த நேரத்தில், ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து, அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதான் மிகவும் சுவையான பேரிச்சம்பழம் அல்வா ரெடி.
  • பரிமாறும் போது இந்த அல்வாவை பாதம், முந்திரி மற்றும் பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும். இல்லையென்றால், நெய்யில் பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தாவை வறுத்து அல்வாவுடன் சேர்த்து விடுங்கள்
  • இந்த அல்வாவை சூடாகச் சாப்பிட்டாலும் சரி, ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டாலும் சரி..அட்டகாசமாக இருக்கும்.
  • இந்த சூப்பர் டேஸ்டி அல்வாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். இந்த தீபாவளிக்கு இந்த அல்வாவை செய்து அனுபவியுங்கள்.

இதையும் படிங்க: 4 கப் அரிசி மாவு, கால் கப் வெண்ணெய்..தீபாவளி ஸ்பெஷல் பட்டர் முறுக்கு ரெடி!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.