ETV Bharat / lifestyle

வீட்டில் கறிவேப்பிலை செடி தளதள வென்று வளரணுமா? 'இந்த' இரண்டையும் வாரத்திற்கு ஒரு முறை தெளிங்க!

புளித்த மாவில் தண்ணீர் கலந்து, சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து கறிவேப்பிலை செடியில் தெளித்து வந்தால் தளதள வென்று செடி வளரும். கறிவேப்பிலை செடி பராமரிப்பை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

author img

By ETV Bharat Lifestyle Team

Published : 2 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)

தமிழர்களின் சமையலில் கறிவேப்பிலை இன்றி சமையலே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு, தமிழ்நாட்டு மக்களின் சமையலில் முக்கியத்துவம் பெற்றது இந்த கறிவேப்பிலை. அன்றாட தேவைக்காக நாம் கடைகளில் வாங்கும், கறிவேப்பிலையில் மருந்து தெளிக்கப்பட்டு தான் நம் கைகளில் கிடைக்கிறது.

இது போன்ற பிரச்சனையே வேண்டாம் என நினைத்து, நமது வீட்டில் கறிவேப்பிலை செடி வளர்க்கலாம் என அசை அசையாய் நர்சரிகளில் இருந்தோ அல்லது பக்கது வீடுகளில் இருந்து வாங்கி நட்ட வைப்போம். ஆனால், எத்தனை நாட்கள் ஆனாலும் செடி வளராமல் குச்சியாக மட்டுமே இருக்கும்.

அப்படியே செடி வளர்ந்தாலும், இலைகள் நிறைய இருப்பது கிடையாது. இது போன்ற பிரச்சனைகளை நீங்களும் சந்தித்துள்ளீர்களா? கவலைய விடுங்க..கறிவேப்பிலை செடியை எப்படி வீட்டில் வளர்ப்பது என்று தெரிந்து கொள்ளலாம்..

மண் வகை: கறிவேப்பிலை பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடியது தான், ஆனால், நன்கு நீர் வடியக்கூடிய மண்ணாக இருந்தால் இந்த செடி செழிப்பாக வளரும். உதாரணத்திற்கு செம்மண்ணை தேர்ந்தெடுக்கலாம். கறிவேப்பிலை வளர்வதற்கு நிறைய பராமரிப்புகள் தேவைப்பகின்றன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்..

இலைப்புள்ளி நோய்: பொதுவாக, பனிக்காலங்களில் கறிவேப்பிலை செடியை இந்த இலைப்புள்ளி நோய் தாக்குகின்றன. இலைகளின் இரு புறத்திலும் புள்ளி புள்ளியாக தோன்றும். உங்கள் வீட்டு செடியில் உள்ள இலைகள் இப்படி இருந்தால் அதை உடனடியாக வெட்டி எடுத்துவிடுங்கள். இல்லையென்றால் அது மற்ற இலைகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது.

பச்சை புழுக்கள்: கறிவேப்பிலை இலைகளில் இருக்கும் புழுக்கள் இலைகளை முற்றிலுமாக சாப்பிட்டு விடுகின்றன. எனவே, இரவு நேரத்தில் டார்ச் அடித்து இலைகளில் புழுக்கள் இருக்கிறதா என்பது பார்த்து அந்த இலைகளை அகற்றி விட வேண்டும். இல்லையென்றால், காலையில் இலைகள் இருக்காது.

வேப்ப எண்ணெய் ஸ்ப்ரே: 5 நாட்களுக்கு ஒரு முறை வேப்பிலை எண்ணெய்யில் தண்ணீர் கலந்து கறிவேப்பிலை செடி மீது ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி செய்வதால், கறிவேப்பிலை செடிகளுக்கு வரும் பூச்சிகளை (Mealy bugs) தடுக்கலாம். இந்த பூச்சிகளை இலைகளை சுருட்டி அனைத்து சத்துக்களை உறிஞ்சி நாம் பயன்படுத்த முடியாத வாறு செய்கிறது. இலைகளில் முட்டைகள் இருந்தால், அதை வெட்டி எடுப்பதன் மூலம் பூச்சிகள் மற்றும் புழுக்கள் படர்வதை தடுக்கலாம்.

ஃபெர்டிலைசர்: கறிவேப்பிலை செடிக்கு நைட்ரோஜன் சத்து அதிகமாக தேவைப்படுகின்றன. எனவே, அரிசி அல்லது பருப்பு கழுவிய தண்ணீரை ஊற்றலாம். இந்த செடிக்கு மட்டுமல்லாது, அனைத்து செடிகளுக்கும் இதை ஊற்றுவதால் செடி செழிப்பாக வளரும்.

டிப்ஸ்:

  1. மாலை நேரங்களில், கறிவேப்பிலை செடியின் இலைகள் மீது தண்ணீர் ஸ்ப்ரே செய்யலாம்.
  2. பெரிய இலைகள் வேண்டும் என்றால், புளித்த மோரில் 10 மடங்கு தண்ணீர் ஊற்றி இலைகளில் ஸ்ப்ரே செய்து மற்றும் மண்ணிற்கு கொடுத்து வந்தால் நுண்ணுயிர்கள் பெருகி இலைகள் பச்சை பசை என்று வளரும்.
  3. புளித்த மாவும், பெருங்காயமும்: ஒரு கப் புளித்த மாவை ஒரு டப்பில் ஊற்றி, அதனுடன் தண்ணீரை நிரப்பி இரண்டு நாட்களுக்கு வைத்து விடுங்கள். புளித்த மாவில் உப்பு போட வில்லை என்றால் கூடுதல் நன்மை. இரண்டு நாட்களுக்கு பின்னர், இந்த தண்ணீரில் அரை டீஸ்பூப் பெருங்காயத்தூளை சேர்த்து, நன்றாக கலந்து செடி வைத்துள்ள மண்ணிற்கு கொடுத்து வந்தால் மண்ணின் பிஎச் லெவல் (pH) அதிகரித்து மண் வலுப்பெறுகிறது. இதனால், செடிகள் தள தள வென வளர்வதோடு பெரிய இலைகளையும் கொடுக்கிறது.

இதையும் படிங்க: இனி அதிர்ஷ்டத்திற்கும் பணத்திற்கும் பஞ்சமே இருக்காது..இந்த 6 செடிகளை வளர்த்து பாருங்க!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.