தீபாவளிக்கு தீபம் ஏற்ற ரெடி ஆயிட்டீங்களா? ஆனால், கடந்த ஆண்டு ஏற்றிய விளக்கில் இப்போதும் எண்ணெய் பிசுக்கு இருக்கிறதா? கவலைய விடுங்க.. இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து அகல் விளக்குகளை கழுவினால் மீண்டும் விளக்குகள் புதியது போல மாறிவிடும்.
- பேக்கிங் சோடா, எலுமிச்சை: பயன்படுத்திய அகல் விளக்குகளை முதலில் டிஸ்யூ பேப்பரால் நன்றாக துடைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, தண்ணீர் ஊற்றி சூடானதும்,அதில் இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடா ஒன்றரை ஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர், ஒரு எழும்பிச்சை பழ சாற்றை பிழிந்து, பழத்தின் தோலையும் தண்ணீரிலேயே போட்டு விடுங்கள்.
இப்போது, ஒன்று-ஒன்றாக அகல் விளக்குகளை இந்த பாத்திரத்தில் போட்டு 5 நிமிடங்களுக்கு தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். தண்ணீர் கொதிக்கும் போதே விளக்கில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு பிரிந்து வருவது தெரியும்.
இப்போது, இந்த பாத்திரத்தை அரை மணி நேரத்திற்கு ஒதுக்கி வைத்து விடுங்கள். விளக்கு அந்த தண்ணீரில் நன்றாக ஊற வேண்டும்.
பின்னர், விளக்கை குழாய் தண்ணீரில் காட்டி கழுவ வேண்டும். இறுதியாக, டிஸ்யூ அல்லது காட்டன் துணியால் இந்த விளக்குகளை துடைத்து எடுத்தால் விளக்குகளில் இருந்த எண்ணெய் பிசுக்கு நீங்கி புதியது போல் இருக்கும். தீபாவளி, கார்த்திகை முடிந்ததும் இந்த முறையை பயன்படுத்தி விளக்குகளை பத்திரமாக ஸ்டோர் செய்து வைய்யுங்கள்.
- வினிகர்: ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு மற்றும் மூன்று தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, இதை விளக்கில் தடவி 1 மணி நேரத்திற்கு ஊற வைத்து பின்னர், தண்ணீரில் கழுவி காட்டன் துணியால் துடைத்து எடுத்தால் புதியது போல் இருக்கும்.
- டிடர்ஜென்ட் பவுடர் + வினிகர்: அகல் விளக்குகளில் இருக்கும் தூசி மற்றும் கிரீஸ் எளிதில் நீங்கக்கூடியது கிடையாது. அவை புதியது போல் ஜொலிக்க வேண்டுமென்றால்..அரை கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் டிடர்ஜென்ட் பவுடர் மற்றும் சிறுது வினிகர் சேர்த்து கலந்து, விளக்குகள் மீது தடவி டூத் பிரஷ் மூலம் மெதுவாக தேய்த்து தண்ணீரால் கழுவ வேண்டும்.
டிப்ஸ்:
- புதிதாக வாங்கிய அகல் விளக்குகள் எண்ணெய்யை அதிகமாக உறியும். அதனால், புது விளக்குகளை வாங்கி வந்ததும் ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். மறு நாளன்று, விளக்குகளை கழுவி வெயிலில் காய வைத்து பயன்படுத்த வேண்டும். இப்படி செய்யும் போது,விளக்குகள் அதிகமாக எண்ணெய் இழுக்காது.
- விளக்கேற்றிய பின் அகல் விளக்கிள் இருந்து எண்ணெய் கசிந்தால், விளக்கேற்றும் போதும் விளக்கின் அடியில் அரச இலை அல்லது வெற்றிலையை வைய்யுங்கள். இப்படி செய்வதால் தரை எண்ணெய் பிசுக்காவதை தடுக்கலாம்.
இதையும் படிங்க:
- தீபாவளி எண்ணெய் குளியல்..காய்ச்சும் முறையும் பயன்படுத்தும் முறையும் இப்படி தான்!
- தீபாவளி லேகியம் செய்வது எப்படி? சர்க்கரை முதல் ஜீரணக் கோளாறு வரை ஒரே தீர்வு!
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்