ETV Bharat / lifestyle

கலப்படம் செய்யப்பட்ட பனீரை கண்டறிவது எப்படி?..டக்குனு தெரிஞ்சுக்க 4 சிம்பிள் டிப்ஸ் இதோ! - HOW TO IDENTIFY FAKE PANEER

கலப்படம் செய்யப்பட்ட பனீர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் செய்தி அதிர்ச்சியளிக்கும் நிலையில், உண்மையான மற்றும் போலியான பனீரை கண்டறிவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 9, 2024, 1:21 PM IST

அசைவம், சைவம் சாப்பிடுபவர்கள் என அனைவருக்கும் புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுவது பனீர் தான். ஆனால், தற்போது சந்தைகளில் கிடைக்கும் பனீர்களில் (Adulteration in paneer) கலப்படம் செய்யப்பட்டு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்திய சோதனையில், 168 சீஸ் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் 47 மாசுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மும்பை-டெல்லி விரைவுச் சாலையில் 1,300 கிலோ போலி பனீர் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. வீட்டில் பனீரால் செய்யப்படும் விதவிதமான உணவுகளை சமைத்து விரும்பி உண்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். ஆனால், நம்பிக்கையுடன் கடைகளில் வாங்கும் பனீர்களில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா அல்லது உண்மையானதா என்பதை எப்படி புரிந்துகொள்வது? இதுபோன்ற சூழ்நிலையில், சில டிப்ஸ்களை பின்பற்றுவதால் போலி பனீரை கண்டறியலாம்..

கலப்படம் செய்யப்பட்ட பனீரை கண்டறிவது எப்படி?:

பிரஷர் டெஸ்ட் : பனீரை ஒரு தட்டில் வைத்து, மிக லேசான அழுத்தத்துடன் உங்கள் உள்ளங்கையை வைத்து நசுக்க முயற்சிக்கவும். அப்போது பனீர் பிரிந்து வந்தால் அல்லது உடைந்தால், அதில் கலப்படம் இல்லை என்று அர்த்தம். இல்லாவிட்டால் அதில் கலப்படம் செய்யப்பட்டதற்கு வாயுப்பு உள்ளது. உண்மையில், போலி பனீரில் காணப்படும் பொருட்கள் பாலின் குணங்களை அழித்து கடினமாக்குகின்றன.

அயோடின் சோதனை: பனீரை சிறிதளவு எடுத்து தண்ணீரில் சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து ஒரு தட்டில் வைக்கவும். ஆறிய பிறகு மேலே சில துளிகள் அயோடின் சேர்க்கவும். இப்போது பனீரின் நிறம் நீலமாக மாறினால், பாலில் செயற்கைப் பொருட்களைச் சேர்த்து பனீர் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

துவரம் பருப்பு பயன்பாடு: முதலில் ஒரு துண்டு பனீரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின்னர் அடுப்பை அனைத்த பிறகு, பனீர் இருக்கும் பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்து 10 நிமிடம் வைக்கவும். பனீரின் நிறம் வெளிர் சிவப்பு நிறமாக இருந்தால், அதில் யூரியா இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

நீங்கள் வாங்குவதற்கு முன் சரிபார்க்கவும்: நீங்கள் ஒரு ஸ்வீட் கடையில் லூசில் விற்கப்படும் பனீர் வாங்குகிறீர்கள் என்றால், சுவைக்க ஒரு சிறிய துண்டு பனீரைக் கேளுங்கள். பனீர் சாப்பிட்ட பிறகு சற்று கடினமாகவோ அல்லது காரமாகவோ உணர்ந்தால், அதில் செயற்கை பொருட்கள் இருக்கலாம்.

இதையும் படிங்க:

  1. சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள்: குடல் புற்றுநோய் எச்சரிக்கை.!
  2. மீன் வாங்குவது எப்படி? பழைய மீனை எப்படி கண்டுபிடிப்பீங்க.!

பொறுப்புத் துறப்பு: மேற்குறிப்பிட்ட அனைத்து சுகாதார தகவல்களும் உங்களது புரிதலுக்காக மட்டும். அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.