சென்னை: தகவல் தொழில்நுட்ப செயழிலப்பு (IT OUTRAGE) காரணமாக உலகமெங்கும் உள்ள விமான சேவைகள், வங்கிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகள் பாதிப்பைச் சந்தித்தது. குறிப்பாக, உலகெங்கும் உள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டும், சில இடங்களில் விமானப் போக்குவரத்து தாமதமாகியும் வருவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் பல்வேறு விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கடைசி நிமிடங்களில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை நோக்கி அனைவரும் சென்றுவிடுவோம். அப்படி முதலில் செய்யவேண்டியது.,
விமான நிறுவனத்தை அணுகவும்: தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படும் பிரச்னைகளுக்கு விமான நிறுவனங்கள் தானாகவே தீர்வு காணும். ஆனால், அதற்கு நீண்ட நேரம் எடுப்பதால் பயணிகள் மாற்று வழியினை யோசித்து செயல்பட வேண்டியிருக்கிறது.
விமான நிலையத்தில் இருப்பவர்கள், பிரச்னையை முடிக்க வேண்டும் என முதலில் அங்குள்ள உதவி மையத்தை நாடுவார்கள். இதற்கு முதலாவதாக வரிசையில் நிற்கும் 500 நபர்களைக் கடக்க வேண்டும். அதற்குள் ஒரு பொழுது போய்விடும். இதற்கு பதிலாக, விமான நிறுவனத்தின் உதவி எண்ணை அழைத்து விவரங்களை கூறுங்கள்.
சமூகவலைத்தளத்தை நாடுங்கள்: பாராட்டுகளோ, புகார்களோ எதுவாக இருந்தாலும் சமூக வலைத்தளம் வழி சென்றால் அதிக கவனத்தைப் பெறுகிறது. அப்படி, இந்த மாதிரியான தொழில்நுட்பக் கோளாறின் போது, விமான நிறுவனத்தின் X தளத்தில் உங்கள் கோரிக்கையை பதிவிடுங்கள். இதன் மூலம் நிறுவனத்தின் ஊழியர்கள் உங்களது கோரிக்கை மீது உடனடி தீர்வு காண்பார்கள். அல்லது விமான நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் அறிவிப்புகளை பெறலாம்.
ரீஃபண்ட் கிடைக்குமா? விமானங்கள் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு அவர்கள் டிக்கெட்டை வாங்க பயன்படுத்திய தொகையை திரும்பப் பெற உரிமை உண்டு. குறிப்பாக, ரீஃபண்ட் கிடையாது என விற்கப்படும் டிக்கெட்களுக்கும் இது பொருந்தும். பயணத்தை மேற்கொள்ள விரும்பாத பயணிகளுக்கு பணத்தை திரும்பப் பெறுவது ஏற்றுக்கொள்ளப்படலாம். மேலும், கடைசி நிமிட மாற்று டிக்கெட்டை வாங்குவது பணத்தைத் திரும்பப் பெறுவதை விட அதிகமான செலவுக்கு வழிவகுக்கும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்