ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் சந்திர சிந்தாகிண்டி அமெரிக்காவின் விஸ்கான்சின் நகரில் உள்ள கன்கார்டியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வருகிறார். கடந்த மே 2ஆம் தேதி முதல் ரூபேஷ் சந்திராவை காணவில்லை எனக் கூறப்படுகிறது. ரூபேஷ் சந்திரா மாயமானது குறித்து தகவல் அறிந்து அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.
காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரும்படி மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே காணாமல் போன ரூபேஷ் சந்திரா குறித்து விசாரித்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கடந்த மே 2ஆம் தேதி முதல் காணாமல் போனதாக கூறப்படும் ரூபேஷ் சந்திராவை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் உள்ளூர் போலீசார் மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் உதவியுடன் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதான. விரைவில் ரூபேஷ் சந்திரா குறித்த தகவல் தெரியவரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன.
இதையும் படிங்க: காலிஸ்தான் ஆதரவாளர் பனுன் கொலை முயற்சி விவகாரம்: அமெரிக்கா ஆதாரம் வெளியிடாதது ஏன்? -ரஷ்யா! - Gurpatwant Singh Pannun