கொழும்பு: இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு செப்டம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் மீண்டும் அதிபர் தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இலங்கையில் அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பாக நேற்று தேர்தல் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை தேர்தல் நடைபெறும் என இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல்கள் ஆணையக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையக் குழு அறிவித்துள்ளது. முன்னதாக இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் கோலாகல தொடக்க விழா! முதல் நாளில் என்னென நடக்கும்? - Paris Olympics 2024