கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இலங்கை தலைமை தேர்தல் அணையர் ரத்னநாயக்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்புமனுத் தாக்கல், மனுக்கள் மீதான பரிசீலனை, வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி, பிரசார தொடக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் ரனில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் அவரது ஆதரவாளர் அதிபர் தேர்தலில் ரனில் விக்ரமசிங்கே புதிய சின்னத்தில் களம் காணுவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை கடும் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியது. அந்நிய செலாவணி கையிருப்பு முற்றிலும் குறைந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்தன.
இதையடுத்து அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான ஒன்று திரண்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். அதைத் தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இதையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் அதிபராக பொறுப்பேற்ற ரனில் விக்ரமசிங்கே கடும் போராட்டத்திற்கு பின்னர் இலங்கையில் தற்போது மீண்டும் சகஜ நிலை திரும்பி உள்ளது.
பொருளாதார நெருக்கடி சூழலில் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை வழங்கியது. தற்போதும் வழங்கி வருகிறது. கடன் உதவி, அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் வாங்குவதற்கு தேவையான நிதி உள்ளிட்ட பல்வேறு வகையில் இலங்கைக்கு இந்தியா உதவியது. விரைவில் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளின் தேசிய பிரதிநிதியாக ரனில் விக்ரமசிங்கே போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 5 முறை பிரதமராகவும், 6 முறை அரசை வழிநடத்திச் சென்றவர் ரனில் விக்ரமசிங்கே என்பது குறிப்பிடத்தக்கது. ரனில் விக்ரமசிங்கேவை எதிர்த்து இலங்கை கேபினட் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் விஜயதாச ராஜபக்சே போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது/
அதேநேரம், இலங்கை சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன, அண்மையில் தனது கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் ராஜபக்சே வேட்பாளராக போட்டியிடுவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் 2வது நாளாக ரத்து! பயணிகள் கடும் அவதி! - Air India Express Flights Canceled