பெஜா: ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் உள்ள பெஜாவில் ஏர் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விமானிகள் கலந்து கொண்டு வானில் வர்ண ஜாலங்களை உமிழ்ந்தபடி சாகசங்களில் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஆறு விமானங்கள் ஒருசேர பறந்து வானில் சாகசம் நிகழ்த்திய கீழே இருந்தவாறு நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
அப்போது வானில் பறந்து கொண்டு இருந்த விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து அருகில் பறந்து கொண்டு இருந்த மற்றொரு விமானம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் நடுவானில் உடைந்து சுக்குநூறாகி போனது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான மற்றொரு விமானத்தில் பயணித்த விமானி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த விமானனி ஸ்பானீஷ் நாட்டை சேர்ந்தவர் என்றும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி போர்ச்சுகலை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து பெஜா ஏர் ஷோ உடனடியாக நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே வானில் இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், எப்படி விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Donald Trump Convict