சென்னை: வானியல் அதிசயம் என்று அழைக்கப்படும் சூரிய கிரகணம் இன்று (ஏப்.8) நிகழ உள்ளது.
சூரிய கிரகணம்: பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் பயணிக்கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இவ்வாறு சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் பயணிப்பதால், சூரிய ஒளி பூமி மீது விழாது. இதன் காரணமாக பூமியில் இருள் சூழும்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
எங்கிருந்து பார்க்கலாம்? இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இந்த சூரிய கிரகணத்தை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய பகுதிகளில் இருந்தே காண முடியும். குறிப்பாக, அமெரிக்காவில் உள்ள 18 மாகாணங்களில் இருந்தும் இந்த நிகழ்வைக் காண முடியும். ஆனால் இந்தியாவில் இருந்து காண முடியாது. மெக்சிக்கோவில் பசிபிக் கடலோரப் பகுதியில் இருப்பவர்கள் தான் இந்த கிரகணத்தை முதலில் காண்பார்கள்.
சூரிய கிரகண நேரம்: இந்த கிரகண நிகழ்வு இந்திய நேரப்படி இன்று (ஏப்.8) இரவு 9.12 மணிக்கு தொடங்கி, நாளை (ஏப்.9) அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைகிறது. இந்திய நேரப்படி, இரவு நேரத்தில் இந்த கிரகணம் நடைபெறுவதால், நம்மால் பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நேரப்படி, மதியம் 2.07 மணிக்கு கிரகணம் ஆரம்பமாகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகண காலம்? முழு கிரகணம் நிறைவடைய சுமார் இரண்டரை மணி நேரம் வரை ஆகும். நாசாவின் கூற்றுப்படி, இந்த முழுமை நிகழ்வு 4 நிமிடங்கள் 27 வினாடிகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது, பூமியில் இருந்து சுமார் 2.23 லட்சம் மைல்கள் தொலைவில், அதாவது பூமிக்கு அருகே காணப்படுவதால் வானில் சந்திரன் பெரியதாக தெரியும். இதற்கு முன்னர் இது போன்ற சூரிய கிரகணம் 1973ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அரிதான சூரிய கிரகணமா? முழு சூரிய கிரகணம், வளைய கிரகணம், பகுதி கிரகணம், முழு சூரிய கிரகணம் இணைந்த கிரகணம் என நான்கு வகை சூரிய கிரகணங்கள் உள்ளன. இதில் முழு சூரிய கிரகணமே இன்று நடைபெறுகிறது. இதன் பின்னர் 2150ஆம் ஆண்டு வரை இது போன்ற சூரிய கிரகணம் நடைபெறாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்கள் எப்படி பார்ப்பது? இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த சூரிய கிரகணம் காண முடியாது என்பதற்காக, இந்த வானியல் அதிசயத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்திய நேரப்படி ஏப்.8ஆம் தேதி இரவு 10.30 மணி முதல் ஏப் 9ஆம் தேதி அதிகாலை 1.30 மணி வரை ஒளிப்பரப்பப்பட உள்ளது.
இதையும் படிங்க: விக்ரம் லேண்டார்: மோடி வைத்த சிவசக்தி பெயருக்கு அங்கீகாரம் - சர்வதேச வானியல் ஒன்றியம் உத்தரவு! - Statio Shiv Shakti