ETV Bharat / international

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மறைவு! புதின் காரணமா? என்ன நடந்தது? - ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி

ரஷ்ய அதிபரி புதினின் தீவிர எதிர்ப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான அலெக்சி நவால்னி சிறையில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2024, 10:49 PM IST

மாஸ்கோ : ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளரான அலெக்சி நவால்னி, பிரிவிணைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஆர்டிக் சர்கிள் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டு இருந்த அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Yamalo-Nenets மாகாணத்தில் உள்ள சிறைச்சாலையில் நவால்னி அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் இறப்பு இயற்கையானது இல்லை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யாவின் அதிபர் புதினுக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்து வந்த காரணத்தினாலே அலெக்சி நவால்னி மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

விஷத் தாக்குதல் முதல் பல்வேறு விதமான தாக்குதல்களில் இருந்து தப்பிய அலெக்சி நவால்னி, தேச விரோதம், பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து சிறையிலும் அலெக்சி நவலானிக்கு பல்வேறு விதமான இடையூறுகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அலெக்சி நவால்னி இறப்பதற்கு முதல் நாள் காணொலி முலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நல்ல நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அலெக்சி நவால்னியின் மரணத்தை சிறை மருத்துவர்கள் உறுதி செய்து உள்ள நிலையில், என்ன காரணத்திற்காக அவர் கொல்லப்பட்டார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே உக்ரைனுடனான போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாட்டு மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்து உள்ள அதிபர் புதினுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியின் மரணம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடிக்க உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

இதையும் படிங்க : வீல்சேர் தட்டுப்பாட்டால் விபரீதம்: ஏர் இந்தியா பயணி பரிதாபமாக உயிரிழப்பு! விமான நிலையத்தில் எதிரொலிக்கும் வீல்சேர் பற்றாக்குறை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.