ETV Bharat / international

புருனே நாட்டிற்குச் சென்றார் மோடி.. 40 வருட நல்லுறவு குறித்து பிரதமர் கூறியது என்ன? - Narendra Modi in Brunei

Modi Visit Brunei: புருனே நாட்டிற்குச் சென்றுள்ள முதல் பிரதமராக மோடி மாறியுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவு பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 12:13 PM IST

டெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பிராந்தியத்தில் உள்ள புருனே நாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகளாக இந்தியா - புருனே இடையே இருந்து வரும் நட்புறவு மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், புருனே நாட்டிற்குச் செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றுள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று புருனே வந்தடைந்தார். இதானையடுத்து, “நான் (நரேந்திர மோடி) முதல்முறையாக புருனே தருசலாமிற்குச் சென்றுள்ளேன். இந்த நேரத்தில் 40 வருட இருநாட்டு உறவால் மகிழ்ச்சி அடைகிறோம். ராயல் குடும்பத்தின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா மற்றும் இதர உறுப்பினர்களையும் சந்தித்து வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வேன்” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சந்திப்பின் போது இந்தியா - புருனே இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, ஆற்றல், விண்வெளி தொழில்நுட்பம், சுகாதார ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு, கலாச்சாம் ஆகியவை மேம்படும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 4 அன்று புருனேவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறேன். அங்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர்கள் லீ செயின் லூங் மற்றும் கோ சோக் டாங் ஆகியோரைச் சந்திக்க உள்ளேன். அது மட்டுமல்லாமல், சிங்கப்பூரின் வணிக சமூகத்தையும் நான் சந்திக்க உள்ளேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த இரு நாட்டுடனான பயணங்களின் போது கிழக்கு கொள்கைகள் மற்றும் இந்தோ - பசிபிக் பார்வை மேம்படும். புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் உடனான சந்திப்பிற்குப் பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா - புருனே - சிங்கப்பூர் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெறும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் எஸ்சிஓ மாநாடு: வந்து சேர்ந்த அழைப்பு.. செல்வாரா பிரதமர் மோடி..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.