ஸ்டாக்ஹோம்(ஸ்வீடன்): மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் இன்று (அக்.10) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று உண்மைகள் மற்றும் மனித வாழ்வின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது 'தீவிர கவிதை உரைநடை' படைப்புக்காக அவருக்கு நோபல் வழங்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
53 வயதான ஹேன், The Vegetarian என்ற தமது நாவலுக்காக 2016 ஆம் ஆண்டு சர்வதேச புக்கர் பரிசை வென்றார். ஒரு பெண் இறைச்சுி உண்பதை நிறுத்துவதென முடிவு செய்த பின் ஏற்படும் விளைவுகளை இப்படைப்பு விவரித்தது. Human Acts என்ற இவரது மற்றொரு நாவல், 2018 ஆம் ஆண்டு புக்கர் விருதுக்கான இறுதிச்சுற்று வரை சென்றது.
இதையும் படிங்க: வேதியியலுக்கான நோபல் பரிசை பெறும் மூன்று விஞ்ஞானிகள்: ஆராய்ச்சியில் கண்டுபிடித்தது என்ன?
17 பெண்கள் உட்பட்ட மொத்தம் 119 பேருக்கு இதுவரை இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக 2022 இல் பிரான்சை சேர்ந்த பெண் எழு்ததாளரான அன்னி எர்னாக்ஸ் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார்.
ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 ஆம் தேதி, நோபல் பரிசு வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.