ETV Bharat / international

பாகிஸ்தானில் புதிய அரசு அமைப்பு? நவாஸ் கட்சியும் - மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி என தகவல்! - Pakistan Eelction 2024

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லிக்- நவாஸ் கட்சியும் - பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Feb 18, 2024, 8:10 PM IST

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் அசிப் அலி ஷர்தாரி சுமூக தீர்வு கண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்த முன்னாள் தேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், ராஜா ரியாஸ், பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஷெபாஸ் ஷெரிப் அமைச்சரவையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர்களுக்கு இடம் அளிப்பதாகவும், அதேநேரம் சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி அமைக்க பாகிஸ்தான் முஸ்லிம் லீக் உறுதுணையாக இருக்கும் என்றும் பேசி முடிவு எடுத்து உள்ளதாக தெரிவித்தார்.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் சுயேட்சையாக களம் இறங்கி 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றினர். இருப்பினும் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.

இதனால் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதியான நிலையில், ராணுவம் மற்றும் இதர கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் போராடி வருகிறார். இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தையில் சுமூக அடைந்து இருக்கும் பட்சத்தில் விரைவில் பாகிஸ்தானில் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் - சட்டவிரோத செல்போன் டவர்கள் அமைப்பு! என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.