புதுடெல்லி: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து முக்கிய நகரங்களை கைப்பற்றி வரும் நிலையில் அங்கிருக்கும் இந்தியர்கள் எவ்ளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கிளர்சியாளர்கள் போரிட்டு வருகின்றன்.இந்த போரில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் இரண்டாவதுபெரிய நகரான அலெப்போ, முக்கிய நகரான ஹமா ஆகிய நகரங்களை கைப்பற்றி உள்ளனர்.நேற்று சிரியாவின் ஹமா நகரை கிளர்ச்சியாளர்கள் கையகப்படுத்தியதை அடுத்து, மாகாண அரசாங்க அலுவலகத்தின் முகப்பில் இருந்த சிரிய அதிபர் பஷார் அசாத்தின் படத்தை துப்பாக்கியால் சுட்டனர்.
இப்போது ஹோம்ஸ் நகரை கைப்பற்றும் முயற்சியில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருகின்றனர். அவ்வாறு நடந்தால், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்-சிரியன் கடற்பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்படும்.விரைவில் தலைநகர் டமாஸ்கஸையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றக் கூடும் என்று தெரிகிறது. இதனால், சிரியாவில் உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
இதையும் படிங்க: தென்கொரிய அதிபரின் அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்த எதிர்க்கட்சிகள்...அதிபரை பதவி நீக்கும் தீர்மானமும் தாக்கல்!
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிரியாவில் நிலவும் தற்போதைய சூழல் காரணமாக, அடுத்த கட்ட அறிவிப்பு வரும் வரை சிரியாவுக்கு பயணம் மேற்கொள்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். சிரியாவில் உள்ள இந்தியர்கள் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். தூதரகத்தின் அவசர உதவி எண்ணை (வாட்ஸ் ஆப் வசதியையும் பயன்படுத்தலாம்)தொடர்பு கொள்ள வேண்டும் .
மேலும் hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். சிரியாவில் இருந்து இந்தியர்கள் எவ்வளவு விரைவில் வெளியேற முடியுமோ அவ்வளவு விரைவில் தற்போது இயக்கப்படும் விமானங்கள் மூலம் வெளியேற வேண்டும். வெளியேற இயலாதவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சிரியாவின் வடக்கு பகுதியில் தற்போது நடைபெறும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றோம். இப்போது ஐநாவின் பல்வேறு அமைப்புகளில் பணியாற்றும் 14 பேர் உட்பட 90 இந்தியர்கள் சிரியாவில் உள்ளினர்.இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தூதரகம் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறது,"என கூறப்பட்டுள்ளது.