ETV Bharat / international

இஸ்ரேல் - ஈரான் போர்.. பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள்? இந்தியா யார் பக்கம்? - Iran Israel war - IRAN ISRAEL WAR

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் ஏற்படும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 12:40 PM IST

Updated : Apr 17, 2024, 3:21 PM IST

ஜெருசலேம் : ஈரான் ஏவிய 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களில் 99 சதவீதம் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் தூதரகம் சேதமடைந்தது. இதில் ஈரானிய அதிகாரிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்து இருந்தது. எந்த நேரத்திலும் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படலாம் என்ற அச்சம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவியது. இந்நிலையில், இஸ்ரேல் மீது ட்ரோன் உள்ளிட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவியது.

170 ட்ரோன், 30க்கும் மேற்பட்ட க்ரூஸ் வகை ஏவுகணைகள், 120க்கும் மேற்பட்ட கண்டம் தாண்டி இலக்கை அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக கூறப்படுகிறது. ஈரான் அனுப்பிய ஏவுகணைகளில் 99 சதவீதத்தை தங்களது வான் பாதுகாப்பு சாதனத்தின் மூலம் இடைமறித்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

மற்ற சில ஏவுகணைகள் விழுந்து வெடித்து சிதறியதில் சில இடங்களில் லேசான சேதாரங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல், ஈரான் இடையே நேரடி போர் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. மேலும் ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அமெரிக்காவின் உதவியால் ஈரானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் வீழ்த்தியது. இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் இரும்புக்கவச பாதுகாப்பை உறுதிப்படுத்த நெதன்யாகுவுடன் பேசினேன்.

தாக்குதல்களை உன்னிப்பாக கவனிக்கிறோம். மக்கள் நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உயர் மட்ட அதிகாரிகளுடன் அதிபர் பைடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ஈரான் தாக்குதலுக்கு ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஈரான் - இஸ்ரேல் இடையே போர் ஏற்பட்டால் பிராந்தியத்தில் பேரழிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்து உள்ளார். மேலும், ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், பிரான்ஸ், மெக்சிகோ, டென்மார், நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

அதேநேரம், போரை கைவிட்டு இரு நாடுகளும் தூதரக ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஈரானின் ட்ரோன் தாக்குதலால் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டு உள்ள அச்சுறுத்தல் வேதனை ஏற்படுத்துவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரும் போர் நிறுத்த கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், வன்முறையை தவிர்த்து ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்கு திரும்பி பிராந்தியத்தில் ஏற்பட்டு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தீவிரத்தன்மையை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என இந்தியா விரும்புவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் மாலில் கத்திக்குத்து: 5 பேர் படுகொலை! என்ன நடந்தது? - Sydney Shopping Mall Attack

Last Updated : Apr 17, 2024, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.