ETV Bharat / international

போரால் அதிகரிக்கும் உணவு தட்டுப்பாடு... காசாவில் ஒரு துண்டு ரொட்டிக்காக நெரிசலில் சிக்கி உயிரிழந்த மூவர்! - DEATHS OUTSIDE GAZA BAKERY

காசாவின் மத்திய பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகரில் பசியால் தவித்த பாலஸ்தீனர்கள் பேக்கரி ஒன்றில் ரொட்டி வாங்க முட்டி மோதியதில் நெரிசலில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில்  பிரட் வாங்க குவிந்த மக்கள்
காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் பிரட் வாங்க குவிந்த மக்கள் (Image credits-AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 2:59 PM IST

டெய்ர் அல்-பலாஹ்(காசா):காசாவின் மத்திய பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகரில் பசியால் தவித்த பாலஸ்தீனர்கள் பேக்கரி ஒன்றில் ரொட்டி வாங்க முட்டி மோதியதில் நெரிசலில் சிக்கி இரண்டு குழந்தைகள், 50 வயது பெண் ஒருவரும் உயிரிழந்த சோகம் நேரிட்டிருக்கிறது.

இஸ்ரேலுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே 14 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவத்தின் அனுமதியுடன்தான் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக காசாவுக்குள் உணவுப் பொருட்கள் அனுப்பப்படுவது பெரும்பாலும் குறைந்து விட்டது. காசா மக்கள் மத்தியில் பசி மற்றும் நம்பிக்கையின்மை அதிகரித்து உள்ளதாக உதவி அமைப்புகளும் ஐநாவும் தெரிவித்துள்ளன. எனவே மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

பிரட் பாக்கெட்17 டாலர்: இது குறித்து பேசிய அல்-அக்ஸா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர், "டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ரொட்டி வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர். அப்போது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ரொட்டி தயாரிப்பதற்கான மாவு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பல நாட்களாக பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. எனவே திறந்திருந்த ஒரு பேக்கரியில் மக்கள் முண்டியடித்துக் கொண்டு பிரட்கள் வாங்க முயன்றனர். ஒரு பிரட் பாக்கெட் என்பது கறுப்பு சந்தையில் 17 டாலருக்கு விற்கப்படுகிறது," என்றார்.

காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பாலும் பேக்கரிகள் மற்றும் உதவி அளிக்கும் உணவகங்களை நம்பி உள்ளனர். பெரும்பாலான பாலஸ்தீனர்கள் நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே உண்பதற்கு உணவு கிடைக்கிறது. பிரட் வாங்கச் சென்று நெரிசலில் உயிரிழந்த சிறுமியின் தந்தை ஒசாமா அபு லாபான் மருததுவமனைக்கு வெளியே கதறியபடி நின்றிருந்தது சோகத்தை ஏற்படுத்தியது. "என் மகள் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை கேள்விப்பட்ட என் மனைவி மயங்கி விழுந்து விட்டார்," என்று கூறினார். ஏறகனவே போர் காரணமாக தமது மகன், தந்தை, உறவினர்களை அவர் இழந்துவிட்டார்.

இதையும் படிங்க: கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள் மாயம்; தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரம்!

பசியோடு தூங்கும் குழந்தைகள்: யாஸ்மின் ஈத் இருமியபடி தம் முகத்தை மூடியபடி ஒரு சிறிய பானையில் பருப்பை சமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த பருப்புதான் அன்றைக்கு அவரது கணவர் மற்றும் நான்கு மகள்களுக்கு உணவாகும். அந்த நாளுக்கான ஒரு வேளை உணவு அதுமட்டுத்தான். இந்த உணவும் அவர்களுக்குப் போதவில்லை. "என் மகள்கள் பசியுடன் தங்கள் கட்டைவிரலை சூப்பிக் கொண்டிருக்கிறார்கள். பசியோடு தூங்கும் அவர்களை முதுகில் தட்டிக் கொடுத்து தூங்க வைக்கின்றேன், என்றார். அந்த பெண்.

போர் முனையில் பசியை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.

டெய்ர் அல்-பலாஹ் பகுதியில் ஆயிரகணக்கானோர் மோசமான நிலையில் உள்ள கூடார முகாம்களில் தங்கியிருக்கின்றனர். உள்ளூர் பேக்கரிகள் வாரத்துக்கு ஐந்து நாட்கள் மூடியிருக்கின்றன. ஒரு பை கொண்ட பிரட் 13 டாலர் வரை கடந்த புதனன்று விற்கப்பட்டது. ஐநாவின் மனிதநேய மையமானது காசாவின் மத்திய பகுதி மற்றும் கிழக்கு பகுதியில் ஆயிரகணக்கானோர் பசியால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கிறது. கடந்த ஏழு வாரங்களாகவே காசாவுக்குள் உணவு பொருட்களை இஸ்ரேல் அனுப்புவது என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒட்டு மொத்த போர் காலகட்டத்தில் இப்போது உணவுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகிறது.

ஊடகத்திடம் பேசிய யாஸ்மின் என்ற பெண், "உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது. எதுவும் வாங்க முடியவில்லை. அண்மை காலமாக எப்போதுமே இரவில் சாப்பிடாமல் பசியோடுதான் உறங்கச் செல்கிறோம்," என்றார் வேதனையுடன். ஒரு சிறிய இன்ஸ்டன்ட் காபி பொடி பாக்கெட் ஒன்றின் விலை 1.30 டாலராக உள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை பத்து டாலராக விற்கப்படுகிறது. சமையல் எண்ணைய் ஒரு நடுத்தர பாட்டிலின் விலை 15 டாலராக இருக்கிறது. இறைச்சி வகைகள் ஒரு மாதமாகவே காசாவில் கிடைப்பதில்லை.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.