பொகோடா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள சான்டா ரோராவில் உள்ள ராணுவ முகாமில் இருக்கும் வீரர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டன. பொருட்களை இறக்கிவிட்டு புறப்பட்ட ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 9 ராணுவ வீரர்களும் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்ததாகவும், பின்னர் சாண்டா ரோசா அருகே கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்ததாகவும் ராணுவம் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கொலம்பியா குடியரசுத் தலைவர் குஸ்டாவோ பெட்ரோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சான்டா ரோராவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி விட்டு திரும்பிய போது விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ரஷ்யாவின் எம்ஐ-17 ரக தயாரிப்பு என்றும், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : ஆபாச வீடியோ விவகாரம்: பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம் - குமாரசாமி திட்டவட்டம்! - Prajwal Revanna Suspended In JDS