மாலே: இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. சுமார் 5.21 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட மாலத்தீவில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்த நாட்டின் அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார்.
முய்சு அதிபராக பதவியேற்றதில் இருந்து சீன நாட்டுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது மோடி குறித்து மாலத்தீவு ஆளுங்கட்சி எம்பிக்கள், அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
🚨Breaking News: Brawl in Maldivian Parliament, Opposition Against Approval Of Muizzu's Cabinet:#Maldives pic.twitter.com/BadDctVW4K
— Gayatri 🇬🇧🇮🇳(BharatKiBeti) (@changu311) January 28, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🚨Breaking News: Brawl in Maldivian Parliament, Opposition Against Approval Of Muizzu's Cabinet:#Maldives pic.twitter.com/BadDctVW4K
— Gayatri 🇬🇧🇮🇳(BharatKiBeti) (@changu311) January 28, 2024🚨Breaking News: Brawl in Maldivian Parliament, Opposition Against Approval Of Muizzu's Cabinet:#Maldives pic.twitter.com/BadDctVW4K
— Gayatri 🇬🇧🇮🇳(BharatKiBeti) (@changu311) January 28, 2024
அதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு, இந்தியர்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல மாட்டோம் எனவும், பலரும் மாலத்தீவு சுற்றுலாவை ரத்து செய்ததுமாக வெளியான பல செய்தி அந்த நாட்டு அமைச்சர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நாட்டு சுற்றுலாத்துறை விமர்சனம் செய்த எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கேட்டதன் அடிப்படையில், அவர்களை சஸ்பெண்ட் செய்ய அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதனிடையே அதிபர் முய்சு தலைமையில், நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க நேற்று மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் முய்சு அமைச்சரவை மற்றும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (MDP) அமைச்சரவை மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக, ஜனாதிபதி முய்ஸுவின் அமைச்சரவையில் தேர்ந்தெடுத்த 4 எம்பிக்களின் பாராளுமன்ற ஒப்புதலை நிறுத்த முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, நாடாளுமன்ற அமர்வைத் தடுத்து நிறுத்தியதாக பல செய்திகள் வெளியானது. மேலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், கண்டித்தீமு எம்பி அப்துல்லா ஷஹீம், அல்துல் ஹக்கீம் ஷஹீம் மற்றும் கெந்திகுல்ஹூதூ எம்பி அஹெமத் ஈசா ஆகியோருக்கு முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஈசாவை இடித்துத் தள்ளி கைகலப்பில் ஈடுபட்டனர்.
அப்போது 2 எம்பிகளுக்கும் காயம் ஏற்பட்டது. முன்னதாக சபாநாயகரின் அருகில் குழந்தைகள் உபயோகிக்கும் பீப்பியை வைத்து ஊதி சத்தமிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அந்த சண்டையை சிறுபான்மைத் தலைவர் மூசா சிராஜ் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். தற்போது சண்டையின் போது தலையில் காயம் ஏற்பட்ட ஷஹீம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் தெருச்சண்டை போல மல்லுக்கட்டி உருண்டு கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி பல விமர்சனங்களை குவித்து வருகிறது.